பக்கம்:கேரக்டர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



142

பார்க்கலாம்? எத்தனை ஜ்வல்ஸ்? பழசுமாதிரி இருக்கே? என்ன விலை?" என்பான்.

"என்ன, குப்பண்ணா! புது வாட்ச் இது! பார்த்தால் தெரியல்லே? சிங்கப்பூர்லேருந்து வந்தது. போன மாசந்தான் வாங்கினேன். இருநூற்று எழுபது ரூபாய்" என்பார் அவர்.

"அடாடா ஏமாந்துட்டேளே சார்! என்கிட்டே சொல்லியிருந்தா இதே வாச்சை இருநூற்றுமுப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பேனே! சரி போறது. இப்ப யார் சார் வாங்கப் போறா? இருநூறு ரூபாய்க்குத் தருவதானால் சொல்லுங்க, ஓர் இடத்திலே கேட்டுப் பார்க்கறேன். அதுவும் உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் விலை போகும்."

"அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, குப்பண்ணா, உன்கிட்டே வந்தா காரியம் நடக்கும்னுதானே காலையிலேருந்து அலையறேன்."

"சரி. வாச்சைக் கொடுங்க. சரியா மூணு மணிக்கு என்னைப் பஸ் ஸ்டாண்ட்லே வந்து பாருங்க" என்று சுடிகாரத்தை வாங்கிக்கொள்வான். இதற்குள் இன்னொரு ஆசாமி அவனைத் தேடிக்கொண்டு வருவார். "என்ன குப்பண்ணா! உன்னை எங்கெல்லாம் தேடறது? காலையிலே எட்டு மணிக்கு என்னைப் போஸ்டாபீஸ் வாசல்லே வந்து காத்துண்டிருக்கச் சொல்லிட்டு நீபாட்டுக்கு வராமலேயே இருந்துட்டயே! காத்துக் காத்து எனக்குக் காலே வலியெடுத்துப் போச்சு. சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?" என்று கேட்பார்.

அவ்வளவுதான். ரிஸ்ட் வாச் ஆசாமியை அப்படியே நடுத் தெருவில் விட்டுவிட்டுப் புதிதாக வந்தவருடன் அவன் போய்விடுவான்.

"உன்னை நம்பி முகூர்த்தத்தை வெச்சுண்டுட்டேன். இன்னும் ஒரு வேலையும் ஆகல்லே; நாளோ ஓடிண்டிருக்குது. நீயோ அதுக்கு மேலே ஓடிண்டு இருக்கே. கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்னே. கச்சேரிக்கு ஏற்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/142&oldid=1481411" இலிருந்து மீள்விக்கப்பட்டது