பக்கம்:கேரக்டர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்பர் பர்த் குப்பண்ணா

அதோ,அப்பர் பர்த்தில் ஆனந்தமாகப் படுத்துக் கொண்டிருக்கிறாரே, அவர்தான் குப்பண்ணா! இப்போது டில்லிக்கு ஒரு காரியமாகப் போய்க்கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் அங்கிருந்து கல்கத்தா போகவேண்டும். அப்புறம் மெட்ராஸ். மறுபடியும் மார்ச் முதல் வாரத்தில் மேற்கு ஜெர்மனி!

ஜெர்மானியர்களின் கூட்டுறவுடன் இந்தியாவில் ஒரு கடிகாரத் தொழிற்சாலை தொடங்குவதற்குத்தான் அவர், இப்படி ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறார். புதுமையான மோதிரக் கடிகாரம் ஒன்றைத் தயாரிக்கவே அவர் இப்போது திட்டம் போட்டு வேலை செய்து வருகிறார். அதாவது, மோதிரத்திலேயே வாட்சும் இருக்கும்!

இந்தியாவில் ஒரு தொழிற்சாலை தொடங்க வேண்டும். இதற்கு யாராவது முதல் போட வேண்டும். குப்பண்ணா பணம் ஏதும் போடாமலே தொழிற்சாலையில் முக்கிய பாகஸ்தர்களில் ஒருவராக இருப்பார். அதாவது, அவல் கொண்டு வருகிறவர் ஒருவர்;உமி கொண்டு வருகிறவர் இன்னொருவர். இரண்டையும் கலந்து ஊதிச்சாப்பிடுகிறவர் குப்பண்ணா!

தொழிற்சாலைக்குப் பெயர் என்ன தெரியுமா? இண்டோ—குப்—ஜெர்மன் ரிஸ்ட் வாட்செஸ் லிமிடெட்! நடுவிலுள்ள 'குப்' என்பது குப்பண்ணாவைக் குறிக்கும். இப்படி ஒரு லெட்டர் ஹெட்டே பிரிண்ட் செய்து வைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/35&oldid=1478952" இலிருந்து மீள்விக்கப்பட்டது