பக்கம்:கேரக்டர்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

இருக்குது. எல்லாத்திலேயும் வாடகை வருது. பென்ஷன் வேறே வருது.

"இதுவரைக்கும் எங்க வீட்டுக்குக் குடிவந்தவங்க எல்லோரும் சொந்த வீடு கட்டிகிட்டுதாங்க போயிருக்காங்க. கடைசியா வந்த அந்த வக்கீல் ஒருத்தர்தாங்க வாடகையே குடுக்காமே என்னை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டாரு. வாடகை கேக்கப்போனா 'தோட்டத்துக் கதவு சரியில்லே. மழைநாள்ளே தாப்பாளே போடமுடியலே வெய்யநாள்ளே காத்தே இல்லே குழாயிலே தண்ணியே வல்லே. அப்படி'ன்னு சும்மா ஏதாச்சும் குத்தம் சொல்லிக்கிட்டேயிருந்தாரு. அவருக்கு, அஞ்சாறு பசங்க. பசங்களா அதுங்க? வால் ஒண்ணுதான் பாக்கி அதுங்களுக்கு. வீட்டுக் கதவுகளை 'நாசனம்' பண்ணி வெச்சுட் டுதுங்க. செத்தெல்லாம் ஆணியாலே குத்தி குத்திப் பொளிஞ்சு வெச்சிட்டுதுங்க. எங்க கண்டாலும் மூட்டைப் பூச்சியை நசுக்கி, சுண்ணாம்படிச்ச செவுத்தெல்லாம் பாழாக்கிட்டுதுங்க. கதவெல்லாம் படால் படால்னு அடிச்சு உடைச்சுட்டுதுங்க. கதவுன்னா எப்படிக் கதவுங்கறீங்க? இப்ப அந்த மாதிரி கதவு போடணும்னா நானூறு ஐந்நூறு ஆவுங்க. எல்லாம் ரங்கூன் டீக்கு. இப்ப என்ன வெலை விக்குது தெரியுமா? குழி அம்பது அறுவதுக்குக் குறைவில்லே! இதையெல்லாம் பாக்கறப்போ எனக்கு வயிறு எரிஞ்சுப் போச்சுங்க.

"என்னங்க? நீங்க சொல்லுங்க; குழாயிலே தண்ணி வல்லேன்னா என்னங்க? 'கிணறு' இருக்குது. தண்ணி கல்கண்டாட்டும் இருக்கும். அதுலே தண்ணி எடுத்துக்கோன்னேன். என்ன மாதிரி கிணறு தெரியுங்களா அது? குளமாட்டம் இருக்குங்க. ஒரு காலத்திலே அக்கம்பக்கத்து ஜனமெல்லாம் வந்து சேந்திக்கினு போவாங்க.

"கிணத்துலே சேந்த முடியாது. குழா ஹைட்லே இருக்குது; அதனாலே கீழே இறக்கி வைக்கணும்னான்.

"சரி; நீங்களே செலவு செஞ்சு குழாவைக் கீழே இறக்கிக்குங்க. ஆறசெலவை வாடகையிலே கழிச்சுக்கோன்"னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/62&oldid=1479444" இலிருந்து மீள்விக்கப்பட்டது