பக்கம்:கேரக்டர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

"யாருடீ நீ? சீதாவின் பெண்ணா? அடியம்மா! பெரியவளா வளந்துட்டியே, எங்கே? துர்க்காபூர்லயா இருக்கே? உன் ஹஸ்பெண்டுக்கு என்னடி வேலை? அவனை அழைச்சுண்டு வரது தானேடி? மெட்ராஸுக்கு வரப்போ லெட்டர் போடு. ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பறேன்...இந்தப் பெண் யார் தெரியுமோன்னோ? என் அத்தானுக்கு அம்மாஞ்சியோட சித்தப்பா பெண், பாவம்; இதுக்குக் கலியாணம் பண்ண முடியாமல் ரொம்பக் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். நான்தான் வரன் பார்த்துக் கொடுத்தேன். கலியாணத்தையே நான்தான் செய்து வைத்தேன். தூரத்து உறவுதான். ஆனாலும் விட்டுட முடியறதா? ஏண்டிம்மா, செளக்கியமா இருக்கயா?"

"ஏன் மாமி, எப்ப மெட்ராஸுக்கு போகப் போறேள்?" என்று கேட்டாள் அந்தப் பெண்.

"நாளைக்கே போகவேண்டியதுதான். நாயைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன். அதுக்கு உடம்பு எப்படி இருக்கோன்னு ஒரே கவலையாயிருக்கு. 'பிளேன்' லேயே போயிடலாம்னு பார்த்தா, டாக்டர் என்னை பிளேன் டிராவல் பண்ணக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லியிருக்கார்... எனக்கு பிளட் பிரஷரோன்னோ...!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/79&oldid=1479478" இலிருந்து மீள்விக்கப்பட்டது