பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 1, தலித் சாகித்ய அகாடமி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : ஒன்று

75



12.3-வது பாகத்தில் அறிவே பிரமமென்றார். 124-வது பாகத்தில் ஆனந்தமே பிரமமென்றார். இங்ஙனம் ஆனந்தமே பிரமம், அறிவே பிரமம், உயிர்ப்பே பிர மம், பிராணனே பிரமம், தேகமே பிரமம், உ.ண்டி யே பிரமமென்று கூறுவதானால், பிரமமென்னும் வார்த்தைக்கே பொருளற்று இன்ன வஸ்துவென்னும் நிலையற்று மிருக்கின்றது. இவ்வகை நிலையற்ற பிரமத்தை வேதங் கூறுமாயின், மக்கள் எவ்வகையா லவற்றைப் பின்பற்றி யீடேறு வாரென்பதும் விளங்கவில்லை. பிர மமென்னும் வார்த்தையின் பொருளும் அதன் தோற்றமும் அதினாலுண்டாகும் பயனும் நிலையற்றிருப்பதை விசாரித்தோம். ஆத்துமா இனி சாமவேதம் 144-வது பக்கத்தில் சருவபரிபூரண ஆத்து மக்கியானத்தை அசுவாதியென்னு மரசனிடஞ் சென்று விறகு கட்டையேந்திய மாணாக்கர்கள் கேட்க வாரம் பிரித்தார்கள் அவற்றுள். சாமவேதம் 146-வது பாகத்தில் வானத்தையே ஆத்து மாவென்று கூறியுள்ளார்கள். 147-வது பாகத்தில் சூரியனையே ஆத்து மாவாக வரைந்திருக்கின்றார்கள். 148-வது பாகத்தில் வாயுவையே ஆத்து மாவாகக் கூறியிருக்கின்றார்கள். 149-வது பாகத்தில் ஆகாயப் பரமாணுவே ஆத்து மா வென்று கூறியிருக்கின்றார்கள். 150-வது பாகத்தில் 2 தகமே ஆத்து மாவென்று குறித்திருக்கின்றார்கள். 151-வது பாகத்தில் பிரிதிவியாகிய மண்ணே ஆத்து மா வென்று குறித்திருக்கின்றார்கள்.