10 Ꮾ க. அயோத்திதாளலப் பண்டிதர் 52. நுண்ணியகருமமு மெண்ணித்துணி. நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலேயாயினும், எண்ணி - தேறவாராய்ந்து, துணி - செய்வதற்கு முயலு மென்பதாம். ஒர் சிறிய காரியமேயாயினும் அக்காரியத்தை சரிவர வாராய்ந்து செய்தலே நன்று. அங்ஙனமின்றி காரியம் சிறிதென்று கவனமற்று செய்வதாயின் சிறு காரியமே பெரு நஷ்டத்திற்குள்ளாக்குமென் றுணர்ந்த ஞானத்தாய் நுட்பச் செயலாயினும் முன் பின் ஆராய்ந்துச் செய்யுமென்று கூறியுள்ளாள். திரிக்குறள் எண்ணித் துணிக கருமந்துணிந்தபின் ணெண்ணுவ தென்ப திழுக்கு. 53. நூன்முறைதெரிந்து சீலத்தொழுகு. நூல் - கலைநூலின், முறை - வழியை, தெரிந்து - அறிந்து, சீலத்தில் - நன்மார்க்கத்தில், ஒழுகு - நடவாயென்பதாம். உலகத்திலுள்ள மக்களில் சிற்சிலர் தங்கடங் கட் சுயப்பிரயோசனங் கருதி எங்கள் தேவனே தேவன் எங்கள் தேவனை நம்பினவர்களே நேரில் மோட்சம் போவார்கள். மற்றவர்கள் நரகம் புகுவார்களென்று பேதைமக்களை வஞ்சித்து பொருள்பரிப்பான் வேண்டி வரைந்துள்ள பொய்நூற்களும் அனந்தமுண்டு. அத்தகைய நூற்களை நன்காராய்ந்து பொய்யகற்றலே நூன்முறைதெரிதலாகும். அங்ங்னமாய் பொய்யகற்றி அநுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்திய மெய் காணவேண்டியவர்கள் ஆதிதேவனம் புத்த பிரானல் கண்டருளிய முதநூலும், அதையடுத்த சார்பு நூற்க ளுமே, சீலத்திற்கும், ஒழுக்கத்திற்கும் ஆதாரமாகும். ஆதலின் பேதைமக்கள் பலநூற்களையும் நம்பி பாழடையாது நூன்முறை தெரிந்து ஒழுக வேண்டுமென்பது அம்மன் கருத்தாம்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/111
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை