1 1 0 க. அயோத்திதாஸப் பண்டிதர் அன்னியனுடைய மனைவியை யிச்சித்து அவளில்லம் புகாத தேகமே அறச்சுக தேகமென்று கூறியுள்ளாள். மூவர்தமிழ் - நாலடி நானுர்று அறம்புகழ் கேண்மெய் பெருமெயிந்நான்கும் பிறன்ருர நச்சுவார் சேரா - பிறன்ருர நச்சுவார் சேரும் பகைபழிபாவ மென் றச்சத் தோடிந்நாற் பொருள். 62. பீரம்பேணிற் பாரந்தாங்கும். பீரம் - வீரம், பேணில் - கொள்ளில், பாரம் - பெருஞ் சுமையை, தாங்கும் - சுமக்கக்கூடும் என்பதாம். யாதொன்றுக்கும் அச்சமின்றி வீரமுற்றுள்ள புருஷன் தனக்கு அதிக பாரமுற்ற சுமையேயாயினும் வீரத்தன்மையால் அதனை யெளிதிலேந்திச் செல்வானென்பது துணிபு. மைேதிடமும், தைரியமுமுள்ள புருஷன் எடுத்த காரியத்தை யெளிதில் முடிப்பானென்பது கருத்து. 63. புலையுங் கொலையுங் களவுந் தவிர். புலையும் - மாமிச யிச்சையையும், கொலையும் - ஜீவயிம் ஸையையும், களவும் - அன்னியர் பொருளை யபகரித்தலையும், தவிர் - அகற்று மென்பதாம். நாவுக்குரிய உருசியின் அவாமிகுதியால் மாமிஷ விச்சையுண்டாயின், கொலையாம் சீவயிம்சைக்கு அஞ்சான் சீவர்கள் கிடையாவிடின் அவற்றை விலைக்குக் கொள்ளுதற்கு அன்னியர் பொருளை களவு செய்ய வஞ்சான் அக்களவின் அவாவால் தன்மையொத்த மக்களையும் வதைக்க அஞ்சான் ஆதலின் ஞானத்தாய் புலையின் யிச்சை முதலாவதகற்ற வேண்டுமென்று கூறியுள்ளாள். 64. பூரியோர்க்கில்லை சீரியவொழுக்கம் பூரியோர்க்கு - நீச்சமிகுத்த கீழ்மக்களுக்கு, சீரிய - சீர் பெறவேண்டிய, ஒழுக்கம் - நன்மார்க்கம், இல்லை - கிடையாதென்பதாம்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/115
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை