சிந்தனைகள் - தொகுதி இரண்டு 1 1 I அதாவது, பொய், வஞ்சினம், சூது, பொருமெய்க் குடி கெடுப்பு நிறைந்த கீழ்மக்களுக்கு மெய்ப்பேசுதல் சகலரிடத்தும் அன்பு பாராட்டல், நெஞ்சங்களங்கமற்றிருத்தல், சகலர் சுகத்தை யுங் கண்டு ஆனந்தித்தல், தங்களைப்போல் சகலரும் சுகமடைய விரும்பல் ஆகிய சீர்பெறும் ஒழுக்கங்களை நோக்கார்களென்பது கருத்து. 65. பெற்றியார்க்கில்லை சுற்றமுஞ் சினமும். பெற்றியார்க்கு - குணங்குடி கொண்டார்க்கு, சுற்றமும் - உறவின் முறையாரும், சினமும் - கோபமும், இல்லை - கிடையா தென்பதாம். பெற்றி யென்னுங் குணத்தை குடிகொள்ள வைத்தவர் களுக்கு சுற்றத்தாரென்னுங் குடும்பமென்பதுமில்லை, சின மென்னுங் கோபமுமில்லை யென்பது கருத்து. 66. பேதமே யென்பது மாதர்க்கொரு பெயர். பேதை அறிவற்ற, மெய் - தேகமென்பது, மாதர்க்கு - பெண்களுக்கு, ஒருபெயர் - குறித்துள்ள வோர் பெயராகு மென்பதாம். பெண்களுக்குரிய வாலை, தருணி, பிரிவிடை, விருத்தை யென்னும் நான்கு பருவத்துள் எழுவகைவயதின் பெயர் களுண்டு. அதாவது ஐந்துவயதுமுதல் ஏழுவயதளவும் பேதைப் பெண்ணென்றும், எட்டுவயது முதல் பதினெரு வயதளவும் பெதுமெய்ப் பெண்ணென்றும், பன்னிரண்டு முதல் பதின் மூன்று வயதளவும் மங்கைபெண்ணென்றும், பதினன்கு வயது முதல் 19 வயதளவும் மடந்தைப் பெண்ணென்றும், இருவது வயது முதல் இருபத்தைந்து வயதளவும் அரிவைப் பெண் ணென்றும், இருபத்தாறு வயது முதல் முப்பத்தோரு வயதளவும் தெரிவைப் பெண்ணென்றும், முப்பத்திரண்டு வயதுமுதல் நாற்பது வயதளவும் பேரிளம் பெண்ணென்றும் எழுவகைப் பெயர்களுண்டு.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/116
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை