சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 115 யாவருக்குத் தெரியாதென்னும் ஒர் காரியத்தை மறைத்து செய்த போதினும் அக்காரியம் தன்னிற்ருனே வெளிவரு மென்பது கருத்து. 75. மூத்தோர்சொல் வார்த்தையமிர்தம். மூத்தோர் - விவேகமுதிர்ந்தோர், சொல் - வாக்கிய மானது, வார்த்தை - சொற் சுவையாம், அமிர்தம் - நீதிபோத மென்னப்படும். விவேக மிகுத்தோர் போதிக்கும் நீதிவாக்கியங்களை செவியிற் கேட்டு அதன்மேறை நடப்பவனெவனே அவன் சகல துக்கங்களையும் போக்கி சுகநிலையடைபவனதலின் மூத்தோர் வாக்கியமாம் அமுதுண்ன வேண்டுமென்பது கருத்து. ஒடதியென்னும் அவுடத முண்பதால் பிணி நீங்கி ஆரோக்கிய மடைவதுபோல் மூத்தோர் வாக்கியமென்னும் அமுதால் துக்கம் நீங்கி சுகமடைவதே காட்சியினினி தென்னப்படும். 76. மெத்தெனப்படுத்தல் நித்திரைக்கழகு. மெத்தென - மெல்லிய பஞ்சனையில், படுத்தல் - சயணித் தல், நித்திரைக்கு - துளங்குகைக்கு, அழகு சுகமென்னப்படும். மிருதுவாகிய பஞ்சுமெத்தையின் மீது படுத்தல் சுகமான நித்திரைக் கேதுவுண்டாமென்று விளக்கியுள்ளாள். 77. மேழிச்செல்வங் கோழைப்படாது. மேழி - ஏரு பிடித்து உழுதுண்பவனின், செல்வம் - திரவியமானது, கோழைப்படாது - குறைவுபடாது என்பதாம். அதாவது ஏருபிடித்து உழுதுண்ணும் உழைப்பாளியா னவன் எத்தொழிலையும் அஞ்சாது செய்யும் தைரியமுடையவ தைலின் அவன் கஷ்டமாகியத் தொழில்களில் எவற்றை யேனுஞ் செய்து சம்பாதித்து தனது திரவியங் குறையாது நிறப்பு வான் என்பது கருத்து.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை