சிந்தனைகள் - தொகுதி : இரண்டு - 1 IS 88. வேந்தன் சீறினந் துணையில்லை வேந்தன் - ஆளும் அரசனானவன், சீறின் - சினந்து நிற்கின், ஆந்துணை - அவனை தடுத்தாளுமுதவி, இல்லை - வேறில்லை யென்பதாம். தேசத்தை யாளும் அரசனுக்கு ஒருவன்மீது மீறியக் கோபமுண்டாயின், அவனது கோபத்தை யடக்கி காப்போர் அங்கு ஒருவருமில்லையென்பது கருத்து. 89. வையந் தொடருந் தெய்வந்தொழு. வையம் - புடவி பாசமானது, தொடரும் - உன்னை யெக்காலத்திலும் பின்பற்றுமாதலின், தெய்வம் - தேய்வகமாம் உண்மெய்யைத், தொழு - உள்ளொளிகண்டொடுங்கு மென்பதாம். பாச அடலியின் பந்தப்பற்ருனது வண்டி எருதின் காலை சக்கரந் தொடர்ந்து செல்லுவதுபோல் மாருபிறவிக்கும், மீளா துக்கத்திற்குங் கொண்டுபோய்விடும். ஆதலின் தெய்வகமாம் உள்ளொளியிலன்பை வளர்த்தி ஒடுங்கவேண்டுமென்பது கருத்து. ஒளவைக்குறள் அந்தத்தி லங்கியழல் போலத் தானேக்கில் பந்தப் பிறப்பறுக்கலாம். 90. ஒத்தவிடத்து நித்திரைக்கொள். ஒத்தவிடத்து - உன்சாதனத்திற்கு நேர்ந்தவிடத்து, நித்திரை - தூங்காமற்றுாங்கும் நிலையில், கொள்ளும் - உட்காரு மென்பதாம். நேர்ந்தவிடத்து ஆனந்த நித்திரையாம் துங்காமற்றுங்கும் நிலையை வற்புறுத்தி யுள்ளாளன்றி தன்னையறியாமற் றுாங்கும் மரணத்துாக்கத்தைக் கூறிளிைல்லை.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/124
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை