சிந்தனைகள் - தொகுதி இரண்டு I 29 றும் புன்செய் பூமியை பயிரிடுங்காலமீதென்றும் நன்காராய்ந்து தான், மழையை வேண்டி ஆகாயத்தை நோக்குவதுபோல் சர்வ ஜீவர்களும் தானியத்தை வேண்டி வேளாளனை நோக்குகிற படியால் பூமியின் பலனைக் கருதுங்கால் ஈகையைப் பெருக்கி சர்வ ஜீவர்கள் மீதும் இதக்க முடையவனுய் ஆதரிக்குஞ் செயலிலிருப்பதே வேளாளர் சிறப்பென்பது கருத்து. 8. மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல். ஆலோசனை கர்த்தனுக்கு அழகு யாதெனில் தன தரசனுக்கு அரிய வாக்கியங்களை விளக்கி தேசத்தை சீர்த்திருத் தலும், வருங்காலச் செயல்களையும் போங்காலச் செயல்களையும் ஆராய்ந்து சேர்க்கவேண்டி யவற்றை சேர்த்தும் அகற்ற வேண்டியவற்றை யகற்றியும் ஆண்டு வருவதே சிறப்பென்பது கருத்து. 9. தந்திரிக்கழகு தன் சுற்றங்காத்தல். தன்னிற் றிர முள்ளவர்களுக்கு அழகு யாதெனில், விருந்தினருடனும் அன்புடனும், புசித்து அன்னத்தாலவர்களைப் போவிப்பதே சிறப்பென்பது கருத்து. 10. உண்டிக்கழகு விருந்தோடுண்டல். உண்ணும்படியான புசிப்புக்கழகு யாதெனில், விருந்தின ருடன் அன்பு பாராட்டி புசித்து அன்னத்தாலவர்களைப் போவிப் பதே சிறப்பென்பது கருத்து. 11. பெண்டீர்க்கழகெதிர் பேசாதிருத்தல். பெண்களுக்கு முக்கிய வழகு யாதெனில் தனது கணவன் கூறும் வாய்மொழிகளுக்கு விவேகமற்ற எதிர்மொழி கூருமல் இட்ட யேவலை யின்போடு செய்தலே சிறப்பென்பது கருத்து. 12. குலமகட்கழகு கொழுநனைப் பேணுதல். நற்குடும்பத்திற் பிறந்த பெண்களுக்கு அழகு யாதெனில், தன் கணவனையே கடவுளாகவும், காப்பவனுகவுங் கருதி
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/134
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை