சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 1.3.3 29. சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே. சிறியோராகும் அறியாப் பிள்ளைகள் செய்தக் குற்றங்களை பெரியோராகும் விவேகிகள் பொறுப்பதே யியல்பாகும். 30. சிறியோர் பெரும்பிழை செய்தனராயின் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. சிறியோரென்னும் அறியாப் பிள்ளைகளாயினும் பெருங் குற்றங்களைச் செய்துவிடுவார்களாயின் அப் பிழையை பெரியோர்கள் பொறுக்கமாட்டார்களென்பது கருத்து. 31. (அதல்ை) வாழிய நலனே வாழிய நலனே. ஒவ்வோர் மக்களும் நல்வாழ்க்கையாம் நன்மார்க்க நடையி லொழுக வேண்டியதே நலனுதலின் வாழியநலனே என்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். - 32. நூருண்டு பழகினு மூர்க்கர் கேண்மெய் நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள்ளாதே. மூர்க்கனெனக் கூறும் பெயர்பெற்ற தேகியுடன் நூறு வருஷம் பழகி யிருப்பினும் நீரின்மேற் படர்ந்துள்ள பாசை போல் ஒட்டா நேயத்தி லிருப்பானன்றி நீரினுள் வேரூன்றும் விருட்சம் போல் நிலைக்காக்கேண்மை யென்பது கருத்து. 33. ஒருநாட்பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே. பெரியோராகும் விவேக மிகுத்த மேன்மக்களிடம் ஒருநாட் பழகினும், அப்பழக்கமானது மத்திய பாதாளமென்னும் இரண்டிலும் வீழ்ந்துருகியுள்ள வேர்போல் பதிந்துள்ள கேண்மையா மென்பது கருத்து. o
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/138
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை