I 34 க. அயோத்திதாஸப் பண்டிதர் 34. (அதல்ை) கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கை நன்றே. மேற்கூறியக் கீழ்மக்கள் மேன் மக்களென்னும் பெயர் வாய்ந்த வகையறிந்தோர் கலை நூற்களைக் கற்றல் நன்று, அவற்றுள் பிச்சைப்புகும் வறிய காலம் வரினும் கலைநூற்களைக் கற்றுத் தெளிய வேண்டுமென்பது ஞானத்தாயின் கருத்து. 35. கல்லாைெருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகும்மே. கலைநூற்களைக் கற்றுணராதவன் தனது குடும்பத்தை உயர்த்தியும் விசேஷித்தும், பேசுதல் பயனற்ற சொற்காளாகி நெல்லினுட் டோன்றும் பதர்போ லொழியு மென்பது கருத்து. 36. (ஆதலின்) நாற்பாற் குலத்தின் மேற்பாலொருவன் கற்றிலயிைற் கீழிருப்பவனே. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் எனும் நான்கு வகைத் தொழில் நடித்தும் நான்கு குடும்பத்தோருள் விவேக மிகுந்த மேற் குடும்பமாம் அந்தணர் குடும்பத்திற் பிறந்தும் கலை நூற்களைக் வாசித்துணராதவன யிருப்பாயிைன் அவனைக் கீழ் குடும்பமாம் கடைகுலத்தா னென்றே யழைக்கப்படுவான். 37. எக்குடி பிறப்பினும் யாவரேயாயினும் அக்குடியிற் கற்ருே ரறவோராவர். மேற்கூறியுள்ள நால்வகைக் தொழிலை நடாத்தும் நாற் குடும்பத்தோருள் எக்குடும்பத்திலாயினும் எவைெருவன் கலே நூற் களைக் கற்று பூரணமடைகின்ருனே அவனே அறிவோம்ை அந்தணனென்றழைக்கப்படுவான்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/139
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை