சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 5.3 சூழ்ந்துக்கொண்டார்கள். அல்லாமல் சிம்மம், யானை, பாம்பு முதலிய ஜெந்துக்களுஞ் சூழ்ந்து மெளன முற்றதுடன் அவரவர் களுக்குள்ள அந்தரங்கக் குறைகளையுங் கேழ்க்கும்படி நெருங்கிய கோஷத்திற்கஞ்சி அம்மன் ஆகாயத்திலெழும்பி அந்தரமாக நின்றுவிட்டாள். ஞானவெட்டி 445-பாட்டு வானத்தெழுந்த வாலாம்பிகைதன்னை மதியாலறிந்து கதியடையாமலும் ஏனந்தனின் முளைத்தெழுந்த கொழுந்தை யிறுக்கின னினிமுறுக்கிக் கிள்ளியே ஞானப்பிரகாச மெய்ஞ்ஞான வித்தாகையால் நாடிக் கருவூரில் நாதத்துடன் கூடி மீன மேஷமறியாமல் குருவந்து வீணதாம் பூசை விருதாவிற் செய்யவும் அவற்றைக் கண்ட குடிகளும் அரசர்களும் அந்தரத்துள்ள அம்மனை சரணுகதிக் கோரி வந்தித்ததின் பேரில் அம்மன் மறுபடியும் வேம்பு மரத்தடியில் வந்துட்கார்ந்து அரசர்களை வரவழைத்து திரிபிடக வாக்கியங்களாகும் திரிசீலமே-தத்துவம், திரிசீலமே-சத்தியம், திரிசீலமே-உத்தமம், அதுவே யுங்களைக் காக்கும் தெய்வமென விளக்கி திரிசீல ஜாக்கிரதம் ஜாக்கிரத மென் றருளி கொல்லா நோன்பு, குறளா நோன்பு, கள்வா நோன்புகளாகிய திரி நோன்புகளையும் பதித்து வாக்குக்காப்பு. மனே காப்பு, தேகக் காப்பாகுந் திரி விரதங்களையுமோதி, தான் பரிநிருவாணமடையுங் காலத்தையுஞ் சகலருக்குந் தெரிவிக்கச் செய்து ஆடிமாதம் பதினெட்டாம் நாள் ஆதிவாரம் பெளர்ணமி திதியில் அம்மன் பதுமாசனத்திருந்து இருவிழிகளே மூடி சுகசமாதி யுற்றனர். அக்கால் சுயம்பிரகாசசோதி உச்சியின் வழியாய் தீபம் போலொளிர்ந்தது. அதைக் கண்ட வரசர்களுங் குடிகளும் பதரிப் பிரலாபித்து தங்கடங்கட் கண்களில் தாரை தாரையாய் நீர்வடிய சிரமீ திருகரங்களைக் கூப்பி அம்ம வடிவுடையாட்டி வால அம்பிகை, அறமுதற் செல்வி, ஆதி தேவி, உற்ற எண்ண முரைக்கும் ஆயி, உள்ளக்குறையை அகற்றுஞ்சீலி, பச்சைப்பருவ பகவதி, அம்பா உச்சியில் வளர்ந்த உள்ளொளிகண்டு நிச்சயமாக நிலைகுலைந்தோம்; யாம் இனி யாவரால்
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/156
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை