சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 17 I ஒருவன் ஒரு மிருகத்தைக் கொல்ல முயற்சித்து வரும் போது, அது அம்மா வென்று அலறும் சப்தத்தைக் கேட்டுச் செல்லும் மனிதர்களுக்கே நரக தண்டணை யென்று நம் மூதோர் கள் கூறியிருந்தால், அம்மிருகத்தைக் கொல்பவனுக்குண் டாகும் துன்பத்தைப்பற்றி நாம் சொல்ல வேண்டுமோ! சிவஞான வள்ளலார் அம்மா வென்றலர வாருயிரைக் கொன்றருந்தி இம்மா னிடரெல்லா மின்புற் றிருக்கின்ருர் அம்மா வெனுஞ்சத்தங் கேட்டகன்ற மாதவர்க்கும் பொய்ம்மா நிரையமெனிற் புசித்தவர்க்கென் சொல்லுவதே சில வருடங்களுக்கு முன் பகூவிகளையும் மாடுகளையும், குதிரைகளையும், ஆடுகளையும், மச்சங்களையும், சுட்டுத்தின்றுச் சோம்பேறிகளாய்த் திரிந்த மிலேச்சர்கள் மேன்மக்களாயதும், ஒழுக்கம், சீலம், ஞானம், விடாமுயற்சி, கருணை, ஈகை முதலிய நற்குணமிகுந்த விவேகிகள் கீழ்மக்களாயதுங் காரணம், அடிமைவாழ்வும் சுயமரியாதை யறியா விசாரணைக் குறைவு மேயாம். ஆடி மாத ஆதிவாரம் பெளர்ணமியில் சிந்திக்கும் ஒளவை யாராம். கிராம தேவி இயற்றியுள்ளத் திரிவாசகமாகும் நீதிநூலில் ‘புலையுங் கொலையுங் களவுந்தவிர்” என்று கூறியிருக்க அவ்வம்மனே சிந்திக்கும் நாம் ஆடுகளையும், கோழிகளையும், அவளுக்கு பலி கொடுத்தால் ஏற்பளோ? ஒருக் காலு மேற்காள். பெளத்த தர்மசுத்த சீலர்களின் குல தேவதை யாக விளங்கிய சாந்த தேவிக்கு மன சிந்தனையை விடுத்து உயிர்வதையும், ரத்த பலியும் கொடுப்பதில்ை, அம்மன் நிருவானகாலத்திற் கொடுத்திருந்த வாக்கும் மயங்கி, கிராமங் களும் சீர்குலைந்து உள்ளக் குடிகளும் நாளுக்கு நாள் பாழடைந்து வருகின்ருர்கள். . . இன்னம் சிலர் அம்மனை நாங்கள் மெய்யாக தொன்று தொட்டு பூஜித்து வருகிருேம் என்பார்கள். ஆனல் அம்மன் புத்த சுவாமியை சிரசிலேந்தியதின் காரண மறிவார்களா? அப்படிய றிந்திருந்தால், இவர்கள் அம்மனை பூங்கரகமாக ஜோடித்து தங்கள் சிரசிலேந்தி தெருவில் திரிவார்களா? இல்லை. பூவாடை
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/174
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை