சிந்தனைகள் - தொகுதி : இரண்டு I 9 கொண்டிருக்கும் பிரமாந்தின மென்னும் குண்டலி நாடியென் றும் குண்டலி சத்தியென்றும் குறியெழுத்தென்றுங் கூறுவர். இத்தகைய எட்டெழுத்தாம் அகாரட்சரத்தை கண்டத்தி லூன்றி குண்டலியை நிமிர்த்தி குணங் குடிக்கொள்ளும் வழிக்கு ஆதியட்சரமாதலின் நாம் எப்போதும் வாசித்துவரும் அகர எழுத்துத் தானேயென்று அவமதித்து அறிவின் விருத்தியை விட்டு விடாதீர்களென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். ஆதியட்சரமாம் அகாரமே அறிவின் விருத்திக்குக் காரணமாகி உகாரமாம் உண்மையொளிகண்டு மகாரமாம் காமவெகுளி மயக்கங்களற்று சிகாரமாம் அன்பில் நிலைப்பதே நிருவான சுகமாகும். சிவவாக்கியர் அகார காரணத்துளே அநேகநேக ரூபமாய் உகார காரணத்துளே வொளிதரித்து நின்றனன் மகார காரணத்தின் மயக்கமற்று வீடதாம் சிகார காரணத்துளே தெளிந்ததே சிவாயமே. ஞானக் கும்மி கட்டுப் படாதந்த வச்சுமட்டம் - அதின் காலே பன்னிரண் டாகையில்ை எட்டுக் கயிற்றில்ை கட்டிக் கொண்டால் அது மட்டுப் படுமோடி ஞானப் பெண்ணே. எட்டென்னும் கணிதாட்சரமாகவும், எழுத்தென்னும் இலக்கிய முதலாட்சரமாகவும், விளங்கும் குறியெழுத்தாம் அகராட்சரத்தை அவமதியாதே என்பது அறிவுறுத்தும் பலம்ை. ஒளவையார் ஞானக்குறள் கூடகமானக் குறியெழுத்தைத் தானறியில் வீடகமாகும் விரைந்து. இத்தகைய சிரேஷ்டமாம் அகராட்சரத்தை ஒவ்வொரில் லந்தோரும் வழங்கி வருதற்கு அப்பா, அம்மா, அண்ணு, அண்ணி, அக்கா, அத்தை, அத்தான். அப்பி என்று அழைப் பிலும் உச்சரிக்கும்படி செய்திருக்கின்ருர்கள்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை