சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 35 32. கடிவது மற கடிவது - ஒருவரைக் கொடு மொழியால் கடிந்துபேசும் வார்த்தையை, மற - நீ எக்காலும் பேசாதே யென்பதாம். முகங் கடுகடுத்தும் வாக்கால் சிடு சிடுத்தும் பேசுவதா ல்ை தனது மனைவிமக்களுக்கு வெறுப்புண்டாவதன்றி, குடும்பத் துவேஷியென்னும் பெயர்பெற்று திருவென்னும் அருளு மகலுமென்பது கருத்தாம். ஆதலின் ஒருவரைக் கடிந்து பேசவேண்டிய காலம் நேரினும் அவ்வாக்கை மிருதுவாகவும் நியாயவாயலிலும் உபயோகிப்பதாயின் மாதுகrகை தருமத்தையும் அதன் சிறப்பையும் விளக்கும். அறப்பளிச்சுர சதகம் கடிதாயெனச் சீறி யெவரையுஞ் சேர்க்காத கன்னிவாழ் மனையகத்தும் ததிவார்த்தையின்றி மிகு கடிவார்த்தை கொண்டுலவு தண்மெயற் ருேரிடத்தும். 33. காப்பது விரதம். காப்பது - உனக்குள்ள நல்லொழுக்கங்களை நிலைக்கச் செய்தல், விரதம் - உடற்காப்பேயாம். அதாவது ஒவ்வோர் மனிதனும் உலகத்தில் சுகமாக வாழ வேண்டுமாயின் தேகக்காப்பு, வாக்குக் காப்பு, மனேகாப் பென்னும் தன் தேகத்தால் மற்றய சீவராசிகளுக்குத் துன்பஞ் செய்யாமற் காப்பதும், தன் வாக்கினல் மற்ருேரை மனநோகப் பேசுதலும், தீங்குண்டு செய்தலு மாகியச் சொற்களைச் சொல்லாது காப்ப்து, தன் மனதில் மற்றவர்களுக்குத் தீங்கு விளையக்கூடிய வண்ணங்களை யெண்ணுமலும், உள்ளத்திற் கபடு சூது வஞ்சினமிவைகளை யணுகவிடாமலுங்காப்பதும் விரதமென்னப்படும்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/42
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை