சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 43 திரிக்குறள் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனை சான்ருேனெனக் கேட்டதாய். குமரேசர் சதகம் அந்த மிகு மரகதக் கல்லைத் தரித்திடி லடுத்ததும் பசிய நிறமாம் ஆனபெரியோர்களோடு சகவாசமது செய்யி லவர்கள் குணம் வருமென்பர்காண். 45. சித்திரம் பேசேல் சித்திரம் - பொய்யாகிய வார்த்தைகளை மெய்போல் அலங்கரித்து, பேசேல் - நீ யென்றும் பேசாதே யென்பதாம். அதாவது தன் கண்ணிற்ை காணுததைக் கண்டது போலலங்கரித்து பேசுதலும், தன் செவியினுற் கேளாததைக் கேட்டதுபோலலங்கரித்துப் பேசுதலும், தன் நாவில்ை உருசிக்காததை உருசித்தது போலலங்கரித்துப் பேசுதலும், தன் நாசியினல் முகராததை முகர்ந்ததுபோலலங்கரித்து பேசுதலும், தன் உடல் பரிசிக்காதனவற்றை பரிசித்ததுபோ லலங்கரித்துப் பேசுதலும், மனமுற்றுச் சொல்லும் பொய்யாதலின் அப்பொய்யே மேலு மேலுந்திரண்டு உண்மெய்யை மறைத்து உலக பந்தத்திற் சிக்கிமாளாதுன்பத்திற்காளாக்கிவிடும். ஆதலின் தான் சொல்லும் வார்த்தைகள் பொய்யென்றறிந்தும் மனசாட்சி யுண்டென்றும் அஞ்சாது அப்பொய்யையே மெய்போல் அலங்கரித்துப் பேசுதலிலும் வாய்மெய்க்கேடு வேறில்லை யென்பதாம். ஈதன்றியும் ஒளவையாகிய ஞானத்தாய் முக்காலமு முணர்ந்தவளாதலின், வருங்காலத்தில் ஒளவையார் அவசரப் பூசை செய்ய அதையுணர்ந்த யானைமுகக் கல்விநாயகர் அவசரப் பூசை செய்யவேண்டாமென்றுங் கூறி தனது துதிக் கையா லெடுத்து கைலாயத்தில் விட்டு விட்டாரென்னுஞ் சித்திரவார்த்தையாக் கற்பனக் கதையைக் கட்டிவிடுவார்கள். அத்தகைய பொய்யாகும் கட்டுக் கதைகளில் மெய்யுணராது மேலுமேலுந் துக்கத்திற் காளாவரென்றுணர்ந்த ஞானத்தாய் சித்திரம் பேசேலென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/50
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை