சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 5 I இத்தகயைாய் புத்தபிரானைத் திருமாலென்று சிந்தித்திருப் பதுமன்றி பின்கலை நூலாகும் நிகண்டில் காப்புக்கு முன் னெடுக்குங் கடவுள்தான் மாலே யாகுமென்று கூறியுள்ள விதியின்படி புத்தபிரானை கண நாயகரென்றும், விநாயக ரென்றும் சகல நூலாக்கியொன்களுந் தங்கடங்கணுாற்களின் காப்பில் சிந்தித் திருக்கின் ருர்கள். இதினந்தரார்த்தம் உணராமலே சிந்தித்தும் வருகின்ருர்கள். தேவரென்பார் யாவருக்கும் வழிகாட்டியும், ஆதிதேவனு மாக சிறந்திருந்தபடி யால் நாயனர் திரிக்குறளுக்குச் சான்றுக்கவிகொடுத்துள்ள புத்த சங்கத்தோராகும் கவிசேகர பெருந் தேவனர் "தேவிற் றிருமாலெனச் சிறந்த தென்னுந் திருவாக்கிலுைம் திருமாலென்னும் பெயர் புத்தருக் குரிய சகஸ்திர நாமங்களிலொன்றென் றறிந்துள்ள ஞானத்தாய் தனது ஞானகுருவாம் திருமாலுக் கடிமைசெய் யென்று திருந்தக் கூறியுள்ளாள். 57. தீவினையகற்று தீய கொடிய, வினை - செயலை, அகற்று - இதயத்திற் பதிய விடாது நீக்கு மென்பதாம். பொய்யைச் சொல்லி வஞ்சிப்பதும், அன்னியர் பொருளை யபகரிப்பதும், பிறர் மனையாளை யிச்சிப்பதும், சீவப்பிராணி களே வதைப்பதும், மதி கெடுக்கும் பானங்களைக் குடிப்பதும் ஆகிய தீவினைகளாம் பஞ்சமா பாதகங்களை யகற்றவேண்டு மென்பது கருத்து. திரிக்குறள் வினைக்கண் விளைகெடலோம்பல் வினைக்குன்ற தீர்த்தாரிற் lந்தன்றுலகு. இத்தகையத் தீவினைகள் ஒழிந்த விடத்து ஞானச்சுடர் விளங்குவதை அநுபவங்கொண்டு அறவாழியான் போதித் துள்ளபடியால் அவரது போதனையைப் பின்பற்றிய புத்த சங்கத்தோருந் தங்கள் தியானங்களில் விளக்கியுள்ளார்கள்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை