சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 5.3 அதாவது, மக்களென்னும் ஆருவது தோற்றத்திற்கு மேலாம், ஏழாவது தோற்றமென்னும் தெய்வமென்போனை, ஆருவது தோற்ற மான மதுகுலத்தோன் இகழ்வாயிைன், அக்கொடுமொழியால் உள்ளக் களிம்பாம் வஞ்சக மிகுந்து தாழ்ந்த பிறவிக்கேகி தவிப்பா னென்பது கருத்து. விவேகசிந்தாமணி ஆசாரஞ் செய்வாராகி லறிவொடு புகழு முண்டாம் ஆசார நன்மெயான லவனியிற் றேவராவர் ஆசாரஞ் செய்யாராகி லறிவோடு புகழுமற்று பேசார்போற் பேச்சுமாகி பிணியொடு நரகில் வீழ்வார். இவற்றுள் மெய்த் தேவர்களென்றும், பொய்த் தேவர்க ளென்றும் இருவகையுண்டு. அவர்களுள், மக்களென சீல மிகுத்து ஒழுக்கத்தினின்று விவேக மிகுத்தோர்களை சருவ மக்களுந் தேவர்களென்று கொண்டாடிவருவ தியல்பாகும். இவர்களே மெய்த் தேவர்களாவர். பொய்வேதப் புலம்பலாலும், பொய் புராணக் கட்டுக் கதைகளாலும், ஆகாயத்தினின்று பூமியில் வந்துதோன்றின ரென்னும், பொய் தேவக் கதைகளையும் ஆகாயத்திலிருந்த தேவர் பெண்வயிற்றிற் பிறந்தாரென்னும் பொய் தேவக் கதைகளையும், அவனைக் கொல்ல அவதரித்தான் இவனைக் கொல்ல அவதரித்தானென்னும் பொய்தேவர்களையும், அந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தான் இந்த மதத்தைக் கண்டிக்க அவதரித்தா னென்னும் பொய் தேவர்களையும், விசாரணைப் புருஷர் இழிவு கூறுவதில் ஒரிடுக்கணு மில்லை, புகழ்ச்சி செய்வதால் ஒர் பிரயோசனமுமில்லை. மக்களினின்று தேவரெனத் தோன்றியவர்கள் பிறப் பிறப் பற்று மறுபடியுங் கருவில்வந்து தோன்ருர்களென்பது சத்தியமாம். சீவகசிந்தாமணி தேவர்கள் லட்சணம். திருவிற் பொற்குலத்திற் றேர்ந்த தேவர்தன் தண்மெய் செப்பிற் கருவற்று சென்று தோன்ருர் கானிலந் தோய்தல் செல்லா குருவமே லெழு கலாகா வொளியுமிழ்த் திலகுமேனி பருதியி னியற்ற தொக்கும் பன்மலர் கண்ணினாடா
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/60
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை