54 க. அயோத்திதாளலப் பண்டிதர் பொய்க் குருக்களின் கற்பன வேதங்களிலும் புரானங் களிலும் வரைந்துள்ள பொய்த் தேவர்கள் கதைகளையும், அவர்கள் நம்பிக்கைகளையும் ஒழித்து மெய்த் தேவர்களும், எக்காலுந் தோற்றக்கூடிய யேழாவது தோற்ற முடையவர்களு மாகிய மகா ஞானிகளை யிகழலாகா தென்னும் பெரு நோக்கங் கொண்டு தெய்வமிகழேலென்னுந் தெளிவுபடக் கூறியுள்ளாள். சொரூபசாரம், எங்கும் பொதுவா யிருக்குமொரு சீவன்முத்தர் தங்கு மிடந்தானே தலவாச - மங்கவர்கள் பார்வையே தீர்த்தமவர் பாதார விந்தமலர்ச் சேவையே சாயுச்சியம். 61. தேசத்தோடொத்துவாழ். தேசத்தோடு - தேசத்துள்ளோர் சீலத்துடனும் ஒழுக்கத் துடனும், ஒத்து-மனமுவந்து வாழ்-நீவாழக் கடவாய் என்பதாம். அதாவது, தேகத்துடன் ஒத்து வாழ்தலும், ஒரு தேசத்துடன் ஒத்து வாழ்தலும், ஒரு பொருளைத் தரும் தேகத்துடன் ஒத்து வாழ்தலாவது மிகு புசிப்பால் மந்த வேதனையுண்டு, மிகு போகத்தால் தாது கெட்டு நஞ்சடைதலுண்டு, மிகு அவாவால் பெருந்துக்கமுண்டு, இவற்றை நிதானித்து மிதபுசிப்பு, மித போகம் மித அவாவினின்று வாழ்தலே தேகத்தோ டொத்துவாழ்த லென்னப்படும். அவைபோல், தேசத்தோருக் குள்ள பொய்யாவிரத சீலத்திலும், கொல்லாவிரத சீலத்திலும், களவாவிரத சீலத்திலும், காமமிகா விரத சீலத்திலும், மதுவால் மயங்காவிரத சீலத்திலும் ஒத்து வாழ்க வேண்டுமென்பது கருத்தாம். இத்தகைய பஞ்சசீலத்தோருடன் ஒத்து வாழாது பஞ்சபாதகச் செயலாம் சீலங்கெட்டு ஒத்து வாழ்வாயிைன் சீலமிகுத்தோர் யாவரும் சீ சீ யென்றிகழ்ந்து சேரவிடா தகற்று வார்கள். அத்தகைய வாழ்க்கைத் துணையற்று வாழ்வதினும் மடிவது மேலாம்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/61
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை