சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 7 I 94. மேன்மக்கள் சொற்கேள். மேல்-சிறந்த, மக்கள் - மனுக்களின், சொல்-வார்த்தையை, கேள்-கேழ்க்கக் கடவா யென்பதாம். வித்தையிலும் புத்தியிலும் மிகுத்துள்ள தன்றி அன்பு ஈகை சாந்தத்தில் உயர்ந்தோர் மாட்டே உலகம் சீர்திருந்துவ தனுபவங் கண்ட ஞானத்தாய் மேன்மக்கள் சொற்கேளென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். சிலர் மேன்மக்களென்ருல் உயர்ந்த ஜாதி யென்றும், கீழ்மக்களென்ருல் தாழ்ந்த ஜாதி யென்றும் அதனுட்பொருளறியாது வேஷ ஜாதியோர் வகுப்பின்படி பொருட்கூறித்திரிவர். அஃது பொருந்தாவாம். 95. மைவிழியார் மனையகல். மைவிழியார்-கண்ணில் மையிட்டு மயக்கவல்லார், மனைவீடுகளுக்கு, அகல்-துார நில்லு மென்பதாம். தூண்டிலிட்டும் வலைவீசியும் மச்சங்களை யிழுப்பது போல், கண்களுக்கு மையிட்டு வாலிப மக்களுக்கு வலைவீசும் மைவிழியார் மனையைக் கண்டவுடன் அவ்விடம் நில்லாது துார வகல வேண்டு மென்பது கருத்து. 96. மொழிவ தறமொழி. மொழிவது-ஒர் வார்த்தை புகலுங்கால், அற-சந்தேக மற, மொழி-சொல்லவேண்டு மென்பதாம், ஒரு வார்த்தையை புகலுங்கால் அவ்வார்த்தையின் பொருள் தெரிந்தும் தெரியாது மிருக்குமாயின் பிரயோசன மற்றுப்போம். ஆதலின் மொழியின் வாககு முழுவதும் தெளிவுற சொல்லவேண்டு மென்பதாம். 97. மோகத்தை முநி. மோகத்தை காமிய மயக்கத்தை, முநி-கடந்து நில்லென்பதாம். காமவெகுளி மயக்கங்களாம், மூன்றினுள் காமியமே மிக்கக் கொடிய தாதலின் அவற்றை முநிந்து ஜயித்தாலே
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/78
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை