சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 7.3 வாது முடிவு பெருதென்றறிந்துள்ள அவ்வையார் வாது முற்கூறே லென்று கூறியுள்ளாள். தருக்கக் கெளமுகி. 113-சூ வாது முற்கூறி வழுவுற விடுத்தல் ஏது பயனின் றிழிவது மாகும். 100. வித்தை விரும்பு. வித்தை - கைத்தொழிலை, விரும்பு - நீ கற்பதற்கு ஆசைக் கொள்யென்பதாம். அதாவது வித்தையை விரும்பி கற்றுக்கொள்ளுவதில் ஒர் பாஷையைக் கற்பதே வித்தையென்று கூறுவாறு முண்டு. அஃது பொருந்தாவாம். எவ்வகையிலென்பிரேல் “கற்ருேர்க்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு” என்னும் முதுமொழியை சிரமேற்கொண்டு தமிழ் பாஷையைத் தெளிவுறக் கற்றவன் கன்னடதேசம் போவானுயின் சிறப்படைவானே. கன்னட பாஷையைத் தெளிவுறக் கற்றவன் மராடதேசம் போவானுயின் சிறப்படைவானே ஒருகாலுஞ் சிறப்படையான். ஒடதி வித்தை, மரவினைவித்தை, தையல் வித்தை பொன்விளை வித்தை, பயிரிடும் வித்தை, செய்யும் வித்தை, உலோகபொருத்த வித்தை, காந்த வித்தை, இரசவித்தை முதலிய வற்றுள் ஒன்றைத் தேறக் கற்று எத்தேசம் போயினும் சிறப் படைவான். அதற்குப் பகரமாய் நமது ஐரோப்பியர் அமரிக்கர் சீனர் ஜப்பானியர் முதலிய மேன்மக்கள் மற்ற தேசத்தோர் பாஷைகளைக் கற்காதிருப்பினும் தங்களிடமுள்ள வித்தைகளின் தைரியத்தால் எங்கும் உலாவி சுகம் பெற்றிருக்கின்ருர்கள். 101. வீடுபெற நில். வீடு - முத்தி, நிருவாண மென்னும் நிலையை, பெற - அடைதற்கு, நில் - ஞானவரம்பில் நிற்கக் கடவா யென்பதாம். வீடுபேரும் நிருவாணமாகும் பிறவியற்ற நிலையே துக்கத்தை யொழித்த விடமாதலின் அவற்றிற்கு கேடிலா பருவம், மோட்சம், கேவலம், சித்தி, வீடு, கைவல்லியம் மீளாகதி
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை