80 க. அயோத்திதாஸப் பண்டிதர் தசபார மென்னும் தசசீலங்களைப் பதிலித்து விம்பாசாரல்ை பலவகை தன்மங்களையும் செய்வித்து வந்த பீடமாகுங் குன்றையே ஆதாரமாகக் கொண்டு, குன்றைவேந்தனென்றும், வரையாது கொடுக்கும் ஈகையை ஆதாரமாகக் கொண்டு செல்வனென்றும், வழங்கிவந்தப் பெயர்களையே ஞானத்தாய் தானியற்றியுள்ள இரண்டாம் வாசகக்காப்பிற் கூறியுள்ளாள். பின்கலை நிகண்டு. சிறத்திடுங் குன்றைவேந்தன் குணபத்திரன் சீலநூலை யறஞ்செயா வாறேகற்ற வதிமயக்கத்தினலே குறைந்திடுந் தமதுமேற்கோள் கொளியமற்றது கரந்தே யறிந்தது மறியாதாரை யேற்றலு மிழிமடந்தான். சூளாமணி மிக்கெரி சுடர்முடி சூடி வேந்தர்க டொத்த வரடி தொழத் தோன்றுந் தோன்றலா யக்கிரி பெருஞ்சிறப் பெய்தியாயிடை சக்கரப் பெருஞ்செல்வன் சாலைசார்ந்ததே. சீவக சிந்தாமணி சினவுணர் கடந்த செல்வன் செம்மலரகலநாளை நூல. 1. அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம். அன்னையும் - தாயாரும்,பிதாவும் - தகப்பனரும், முன் ஆதியாகவும் முந்நிலையாகவும், அறி - காணக்கூடிய, தெய்வம்கடவுளர்களென்பதாம். அதாவது குழவியாகத் தோன்றியக்கால் அமுதுாட்டி ஆராட்டியவளும், அன்னமூட்டி பாராட்டியவளுமாகிய தாயாரும், சேயையுந் தாயையும் ஆதரித்துவந்த தந்தையும், காப்பு இரட்சை யிரண்டிலும் முதற் கடவுளாகத் தோன்றியுள்ள படியால் அவர்களையே கண்ணிற்கண்ட முதற் தெய்வமென்று கூறியுள்ளாள்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/85
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை