சிந்தனைகள் - தொகுதி : இரண்டு 89 15. காவருனே பாவையர்க்கழகு. காவல்தானே - பெண் விவேகியாயினும் அவளை விவேகமுடன் காக்குங் காவலாளன் இருப்பாயிைன், பாவையர்க்கு - பதுமையாம் அழகு நிறைந்த பெண்களுக்கு, அழகு - சிறப்பாகும் என்பதாம். நாணம், அச்சம், மடம், பயிற்பு இன்னன்கு மமைந்த பெண்ணுருக் கொண்டவளாயினும் அவளுக்கோர் நற்காவ லனில்லாவிடின் பெண் மெய்க்கு எவ்விதத்துங் கேடுண்டா மென்றுணர்ந்த ஞானத்தாய் காவல்தானே பாவையர்க் கழகென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள். 16. கிட்டாதாயின் வெட்டென மற. கிட்டாதாயின் - நீ இச்சிக்கும் பொருள் கிடைக்காவிடின், வெட்டென - துண்டிக்கும் பொருளைப்போல் அவ்விச்சையை, மற - அகற்றிவிடு மென்பதாம். மக்கள் நாடும் சிற்றின்பப் பொருள் கிட்டாதாயினுந் துக்கம், ஒர்கால் கிட்டுமாயின் அப்பொருளை கைதவரினும் துக்கம் ஆதலின் ஒர் பொருளின்மீது மிக்க அவாப்பற்றி நிற்கலாகா தென்பது கருத்து. 17. கீழோராயினுந் தாழவுரை. கீழோராயினும் - உம்மையடுத்து யாதா மொன்றைக் கேட்போர் யேழைகளாயினும், விவேகமற்றவர்களாயினும், தாழவுரை - மிருது வாக்கியத்தால் அவர்களுக்கு பதிலுரைக்கக் கடவா யென்பதாம். விவேகமிகுந்த மேலோர்களிடம் அவிவேகிகளாம் கீழோர்கள் ஒன்றைநாடி சென்றக்கால் அவர்களை யன்புட னழைத்து வேண்டியவற்றை விசாரித்து உபசரித் தனுப்பு வார்களாயின் அதன் சார்பால் அவிவேகிளாகும் கீழோர் களுக்கும் ஒர் நற்கிருத்தியம் உதயமாமென்பது கருத்தாம்.
பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 2, தலித் சாகித்ய அகாடமி.pdf/94
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை