பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116


மிக மிக‍க் குறைந்திருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டுமோ? அன்றியும் இத்துணை மக்களையும் ஒரே பொழுதில் கழுவேற்ற எந்நாட்டில்தான் கழுக்கள் கிடைத்திருக்கும். அரசியல் முறையை அறிந்தவர் எவரும் இக்கதையை நம்பார். மேனாட்டில் மேற்கண்டபடி கொள்கை வேறுபாட்டால் பிறரைத் தீக்கு இரையாக்கிய போதும் எண்ணாயிரவரை வாட்டியதில்லை. ஒரு சிலரையே வருத்தினர். அது கண்டே நாடு கலங்கியது. போரும் எங்கும் எழுந்தது.

எண்ணாயிரவரைக் கழுவேற்றுவதை எவர் மனந்தான் கண்டு பொறுக்கும்? அவர்களின் உற்றார் உறவினராய் எத்துணை மக்கள் வந்து குவிந்திருப்பர்! கூட்டம் கூட்டமாகச் சிறைப்பள்ளி புகுவது என்று மக்கள் முன் வந்தால் அவர்களைச் சிறை செய்ய எந்த அரசியலும் அஞ்சும். ஆங்கில அரசியலை உற்று நோக்குங்கள். ஒரு ஜதீந்த்ரதாஸர் சிறையில் பட்டினி கிடந்து இறந்தார் என்றால் அரசியல் எவ்வாறு கலங்கியது? எனவே, எண்ணாயிரவரைக் கழுவேற்றுவது அந்நாளிலும் இந்நாளிலும் கனவிலன்றி நனவில் முடிவது ஒன்றன்றாம்.

காஞ்சியில் விண்ணகரில் பலகைச் சித்திரம் பொதுவாக‍க் கழுவேற்றும் நிலையைக் குறிக்கிறதாம். “தலையை அறுப்பதே கரும‍ம் கண்டாய்” என்பது தொண்டரடிப் பொடியார் பாடல். ஆனால், இவை எட்டாம் நூற்றாண்டில் எழுந்த கனவுகள்; அப்போதும் நனவில்