பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


ராய் மயங்கி ஒரு பேய்த்தேர்ப்பின் குடம் கொண்டு நீர்க்குச் செல்வார்” (1280) என்பர். அருகர்கள் உயிரானது கட்டு நீங்கி அருகனாம் கடவுள் ஆம் என்று கொள்வர். பௌத்தர்களும் மெய்யுணர்வு பெற்று நிருவாணநிலை எய்திய புத்தர் பெருமானே வழிபடத்தக்கவர் எனக் கொண்டு அவரைக் கடவுளாகப் போற்றுவர். முன் இல்லாத கடவுள்தன்மை அருக‍க் கடவுட்குப் பின் வந்து எய்தியதாம். எல்லாம் பாழ் எல்லாம் க்ஷணிகம் என்று கூறுவாருக்கு எதிரில், புத்தர் பெற்ற நிருவாண நிலையும் பாழே (இல்லாத‍து ஒன்றே) என்று சம்பந்தர் வாதிடுவதாகச் சேக்கிழார் பாடுகிறார். இக்கடவுளர் சைவர்கள் கொள்கைப்படி கடவுளர்கள் அல்லராயினும் இவர்கள், எல்லாம் சிவனே ஆதலின், சிவனை வணங்குகிறார்கள் என்று சம்பந்தர் பாடுவதனைக் காண்கிறோம். (3446, 3447). மேலே கூறிய காரணங்களால் அருகரும் புத்தரும் கூறும் கடவுளரைப் பற்றிச் சம்பந்தர்,

“எண்டிசையு மில்லதொரு தெய்வ முளதென்பர்
அது என்ன பொருளாம்” (3666)

என்று பாடுகிறார். இதனாலே, உண்மையான குறிக்கோளை அன்னோர் அறியாதவர் என்றும் உண்மையான சத்து சித்து ஆனந்தமான கடவுளை அன்றி, அசத்தும் அசித்தும் துக்கமுமாக உலகில் காண்பவனவற்றையே பொருள் எனக்கொண்டு ஆராய்கின்றவர்கள் அவர்கள் என்றும் சுட்டுகின்றார். “சடங்கொண்ட சாத்திரத்தார்”