பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


பலரையும் கொல்வதன்றி வேறென்ன? ஏன் கொல்ல எண்ணினர்? தம் கொள்கையை உடன்படாத ஒரு பெரும் பழியை எண்ணியன்றோ? இவர்களது கொல்லாமை எனும் பேரறம் இருந்தபடி என்னே, என்னே! தீயிடுவதைத் திருவருளால் அறிந்து பிழைத்த சம்பந்தர்:

பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர்
எத்தராம் அமணர் கொளுவும் சுடர்
எக்கராம் அமணர் கொளுவும் சுடர்
துட்டராம் அமணர் கொளுவும் சுடர்
எண்ணிலா அமணர் கொளுவும் சுடர்
வஞ்சகஞ் செய்தமணர் கொளுவும் சுடர்
கங்குலார் அமண்கையர் இடுங்கனல்
ஏத்திலா அமணர் கொளுவும் சுடர்
தூவிலா அமணர் கொளுவும் சுடர்
குண்டராம் அமணர் கொளுவும் சுடர்.

என்று பாடுகின்றார். இவர்களிலும் வன்கணார் யார்? அமணர் என்பதன்று பழி; சுடர் கொளுவுதலே பழி; அமணராய் இருந்தும் இவ்வாறு செய்வதே பெரும்பழி;

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

என்பர் திருவள்ளுவர். இத்தகையாரைச் சம்பந்தர் ‘எக்கர்’ என்றும், ‘எத்தர்’ என்றும், ‘பொய்யர்’ என்றும், ‘வஞ்சர்’ என்றும், ‘தூவிலார்’ என்றும், ‘குண்டர்’ என்றும், ‘மிண்டர்’ என்றும், ‘கள்வர்’ என்றும் பழிப்பது பழியோ? திருவள்ளுவர் இத்தகையாரைப் பழிப்பதில் இப்பழி கால் கூறாகுமோ?