பக்கம்:சாவி-85.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சண்டையின்போது எதிரியின் தலைமுடியைப் பிடித்து இழுக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால் மாமிச மலை கிங்காங் இதைப் பற்றிக் கவலைப்படாமல் தாராசிங்கின் முடியைப் பிடித்து இழுப்பார். அப்படி இழுக்கும்போது தாராசிங் போடுவதோ நண்டுப்பிடி... கிங்காங் போடுவதோ சிண்டுப்பிடி' என்று பளிச் சென்று வர்ணனையில் நகைச்சுவை மின்னப் பேசுவார் சின்ன அண்ணாமலை. ஒருநாள் கிங்காங்கை சாவியும் சின்ன அண்ணாமலையும் சென்னை மவுண்ட் ரோட் அம்பாஸிடர் ஹோட்டலில் - இப்போது இந்தியன் ஒவர்லீஸ் வங்கி உள்ள இடம் - சந்தித்தார்கள். அன்று மாலை சென்னையில் நடக்க இருந்த நிகழ்ச்சி பற்றி விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்கினார்கள். அதன்படி, ஐந்தாவது ரவுண்டில் தாராசிங்கை கிங்காங் வலுச்சண்டைக்கு இழுத்து மேடையிலிருந்து கீழே தள்ளிவிட வேண்டும். தாராசிங் ஆவேசமாக மீண்டும் மேடை ஏறி மாமிச மலை போன்ற கிங்காங்கைத் தன் இரு கைகளாலும் தலைக்கு மேலே தூக்கி மூன்று முறை தட்டாமாலை சுற்றிக் கீழே போட வேண்டும். கிங்காங் ஒன்றும் இயலாதவராக மல்லாந்து கிடப்பார். அவர் மீது தாராசிங், கம்சன் மீது கிருஷ்ணன் போலப் பாய்ந்து அமர்ந்து அவர் நெற்றியில் ரத்தம் கசியும் அளவுக்கு ஓங்கி அடிக்க வேண்டும். கிங்காங் நெற்றியில் இயற்கையிலேயே மூன்று மடிப்புகள் உண்டு. அந்த மடிப்புகளுக்கிடையே வரிவரியாக ஆழமான மூன்று கோடுகள். அந்தக் கோடுகளை முன்கூட்டியே ரேஸர் பிளேடால் லேசாக ரத்தம் கசியும் அளவுக்குக் கீறி, பவுடர் போட்டுத் துணியால் ஒற்றி விட்டுவிடுவார் கிங்காங். சண்டை நடக்கும்போது தாராசிங், கிங்காங் நெற்றியில் பட்பட் என்று ஓங்கி அடிக்க, அந்த இடத்தில் ரத்தம் பீறிட்டு வெளியாகும். அந்த ரத்தத்தை தாராசிங் தன் வலது உள்ளங்கையில் 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/101&oldid=824337" இலிருந்து மீள்விக்கப்பட்டது