பக்கம்:சாவி-85.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 விட்டுப் போவார்கள். போகும்போது நீங்கள் ஒரு கெளரவமான எழுத்தாளர். எழுதுவதை விட்டு உமக்கு ஏன் இந்தத் தொழில்? என்று அனுதாபத்தோடு சாவிக்கு அட்வைஸ் வேறு கடன் சொன்னவர்கள் சொன்னவர்கள்தான். பணம் வரும் என்ற நம்பிக்கையில்லை. சாப்பிட்டு சப்புக் கொட்டி பேஷ் என்றார்களே தவிர கேஷ் தரவில்லை. எத்தனை நாள்தான் நஷ்டத்தைத் தாங்க முடியும்? ஒரு வருடத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வேறு வழியின்றி கடையைக் கட்ட வேண்டியதாயிற்று. 'அந்த ஒரு வருடத்தில் எனக்குக் கிடைத்த ஒரே லாபம் என் வீட்டுக்குத் தேவையான மளிகைச் சாமான்கள், பால், தயிர் ஆகியவற்றை காஃபி பேலஸுக்கு வாங்கியதிலேயே அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டதுதான்' என்கிறார் சாவி. 'காஃபி பேலஸ் கதவை இழுத்து மூடிய பிறகு வாழ்க்கையின் கதவே மூடப்பட்டு விட்டதோ? என்ற கவலையில் ஆழ்ந்தார். 'ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்: என்பார்களே, அது பொய்த்துப் போகவில்லை. கல்கி'யின் கதவு 'சாவிக்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்தது. 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/106&oldid=824350" இலிருந்து மீள்விக்கப்பட்டது