பக்கம்:சாவி-85.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சென்னைக்குத் திரும்பி வந்து அதற்குரிய சன்மானத்தைப் பெற்றுச் செல்வார். இச்சமயத்தில் தொழிலதிபர், எச்.டி.ராஜா என்பவர் வாரப் பத்திரிகை ஒன்று தொடங்கப் போவதாகவும், எழுத்தாளர் கே.அருணாசலம் (அருண்) அதன் ஆசிரியர் என்றும் ஒரு செய்தி கிடைத்தது. அருணைப் போய்ப் பார்க்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவரே வந்து சாவியைப் பார்த்து உதவி ஆசிரியர் வேலைக்கு அழைத்தார். அவர் சாவியின் நீண்ட கால நண்பர். எனவே சாவியின் நிலைமையை அறிந்து அவராகவே ஐம்பது ரூபாய் அட்வான்ஸ் வேறு கொடுத்துவிட்டுப் போனார். அப்போது ஆசிரியர் கல்கி அவர்கள் மறைந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. சாவிக்கு 'கல்கி'யில் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை. கல்கி மானேஜர் திரு. வைத்தியநாதனை அவருடைய இல்லத்தில் போய்ப் பார்த்து தம் விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார். சாவியிடம் வைத்தியநாதன் அன்பும் அக்கறையும் கொண்டவராக இருந்த போதிலும் பிடி கொடுத்துப் பேசாமல் 'பார்க்கலாம் என்று மட்டும் சொல்லி அனுப்பினார். ஆனாலும் மறுநாளே கல்கி உரிமையாளர் சதாசிவத்திடம் நல்ல மூட் பார்த்து சாவியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். திரு. சதாசிவம் அவர்களுக்கு சாவியிடம் எப்போதுமே அன்பு உண்டு. வைத்தியநாதனிடம் 'சரி, வரச் சொல் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். இரண்டொரு நாளிலேயே சாவி கல்கியில் சேர்ந்து விட்டார். வைத்தியநாதன் செய்த இந்தப் பேருதவியை சாவி என்றுமே மறந்ததில்லை. அவரைக் காணும்போதெல்லாம் நன்றி கூறத் தவறியதுமில்லை. 'கல்கியில் வேலை கிடைத்துவிட்டது. நான் அங்கே சேர்ந்து விட்டேன்' என்று கூறி, நண்பர் அருணாசலத்திடம் அவர் கொடுத்த அட்வான்ஸையும் திருப்பித் தந்தபோது, 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/108&oldid=824354" இலிருந்து மீள்விக்கப்பட்டது