பக்கம்:சாவி-85.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் "என்னய்யா, இப்படி செஞ்சுட்டீங்களே! நான் ரொம்ப நம்பிக்கை யோடு இருந்தேனே' என்று மிகுந்த ஏமாற்றத்துடன் வருத்தப் பட்டார் அருண். இரண்டாவது முறை கல்கி கார்டனுக்குள் காலடி வைத்த போது சாவியின் மனதில் ஒரு குதூகலத் துள்ளல் இருந்தது. அவரைக் கண்டதும், சதாசிவம் சிரித்துக் கொண்டே “இங்கே எல்லோருமே உங்கள் பழைய நண்பர்கள். நீங்கள் வருவதில் அவர்கள் எல்லோருக்குமே ரொம்ப சந்தோஷம்" என்று கூறி வரவேற்றார். மீண்டும் கல்கியில் சேர்ந்துவிட்ட உற்சாகத்தில் பல தலைப்புகளில் nரியஸ் கட்டுரைகளும், நகைச்சுவைக் கட்டுரைகளும் எழுதித் தள்ளினார் சாவி. மாறு வேஷத்தில் மந்திரி', 'சூயஸ் கால்வாயின் கதை - போன்ற கட்டுரைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. கொத்தமங்கலம் சுப்பு சாவியைச் சந்திக்கும்போதெல்லாம் சாவியின் எழுத்தைப் பாராட்டிக் கொண்டிருந்தார். கல்கியில் வெளியான சாவியின் கட்டுரைகளை விகடன் ஆசிரியர் வாசன் அவர்களும் படித்து ரசித்திருக்கிறார் என்பதை, கல்கியில் அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த நண்பர் சாமா மூலம் சாவி அறிந்து கொண்டார். இந்த இடத்தில் சாவிக்கும் சாமாவுக்கும் இடையே இருந்த நட்பு பற்றிக் குறிப்பிட வேண்டும். சாவி அவர்களின் பேருள்ளம் பற்றி ஒரு சம்பவத்தைத் தன்னிடம் சாமா நினைவு கூர்ந்ததை, புதுவை மத்தியப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், சிறந்த கல்வியாளரும், தற்போது மத்திய திட்டக்குழு உறுப்பினரும், அமரர் சாமாவின் உறவினருமான டாக்டர் கி.வேங்கடசுப்பிரமணியம் அவர்கள் சொல்கிறார்: “ஒரு முறை சாவி அவர்களுக்கு எழுத்தாளப் பெருமக்கள் நடத்திய விழா ஒன்றில் அருமையான சால்வை ஒன்று போர்த்தப் பட்டது. அப்போது சாமா அவர்கள் உடல் நலிந்திருந்த நேரம். 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/109&oldid=824356" இலிருந்து மீள்விக்கப்பட்டது