பக்கம்:சாவி-85.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Dr. M.A.M.Ramaswamy 8.A., Diitt., CHETTINAD HOUSE RAJAH ANNAMALAIPURAM, CHENNAI - 600 028. அன்புள்ள திரு. ராணிமைந்தன் அவர்களுக்கு, வணக்கம். 'சாவி” என்று அன்புடன் அழைக்கப்பெறும் திரு. சா.விஸ்வநாதன் அவர்கள் தமது 85வது வயதை அடைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும் முயற்சியில் தாங்கள் ஈடுபட்டிருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்களையும் பாராட்டி தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன். தமிழ்ப் பத்திரிகை உலகில் தனது 60 ஆண்டுகளுக்கு மேலான அனுபவ முதிர்ச்சியால் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பவர். தலைசிறந்த ஒரு நகைச்சுவை எழுத்தாளர். நகைச்சுவையுடன் கருத்துச் செறிவினையும் கலந்து இலக்கியம் படைக்கும் வல்லவர். பழகுவதற்கு இனிய பண்பாளர். தமிழ் வளர்ச்சிக்கு தன் அறிவாற்றலைப் பயன்படுத்தி முத்திரை பதித்தவர். வாழ்க்கையின் பல்வேறு கால கட்டங்களையும் தமது சோர்விலா உழைப்பால் கடந்து வெற்றி கண்டவர். அவருடைய வாழ்க்கை வரலாறு இளம் பத்திரிகையாளர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் படித்துப் பயன் பெற உதவும் என்பதில் ஐயம் இல்லை. திரு. சாவி அவர்கள் ஒய்வு பெற்றிருந்தாலும் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, தமிழ்ப் பத்திரிகை உலகிற்கு தமது அறிவாற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்று அருள் தரும் ஐயன் ஐயப்பன் திருவடிகளைச் சிந்தித்து வணங்குகிறேன். | مییجیے یہ ع_ۃ மு.அ.மு.இராமசாமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/11&oldid=824358" இலிருந்து மீள்விக்கப்பட்டது