பக்கம்:சாவி-85.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் உபயோகிக்கிறது. கல்கி'யில் அப்படியில்லை. தமிழ் பற்றி, தமிழர்கள் பற்றி நிறைய எழுதுகிறார்கள். பிராமண பாஷைக்கு அவர்கள் விகடன் மாதிரி முக்கியத்துவம் தருவதில்லை. பூப் பிரதட்சணம், உபய குசலோபரி, சமர்ப்பணம் - போன்ற தலைப்புகளே விகடனில் திரும்பத் திரும்ப வருகின்றன. இதனால் பிராமணர் அல்லாதார் அதிருப்தியைச் சம்பாதிக்கிறீர்கள். அதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது." தொடர்ந்து, “கதைகளில் கூட பிராமின் காரக்டர்ஸ்தான் அதிகம் வருகின்றன. நீங்க வெறும் கர்நாடக இசை பற்றித்தான் விமரிசனம் எழுதுகிறீர்கள். கல்கியில் தமிழிசை இயக்கம் பற்றி எழுதுகிறார்கள். 'பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்றுக் கதைகளின் மூலம் தமிழர்களின் சரித்திர காலப் பெருமைகளைச் சொல்கிறார்கள் என்றார் சாவி. "யூ ஆர் ரைட் என்று கூறிய வாசன் அவர்கள் சில வினாடிகள் ஆழ்ந்த சிந்தனையுடன் இருந்து விட்டு, “சரி; நான் ஒரு சரியான உதவி ஆசிரியரை விகடனுக்குத் தேடிக் கொண்டிருக்கிறேன். இப்போது உனக்கு விகடனில் சேர விருப்பம் இருந்தால் சொல்' என்றார். சாவி மெளனமானார். 'நீ நகைச்சுவையாக எழுதுகிறாய். விகடன் ஹ்யூமரஸ் மாகலின். ஆகவே உன் எழுத்து விகடனுக்குத்தான் பொருத்தம். யோசித்துச் சொல்' என்றார் விகடன் அதிபர். சாவி அப்போதும் பதில் சொல்லவில்லை. வாசன் அவர்கள் அப்போது ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தைகளை சாவி இன்றளவும் மறக்கவில்லை. "See, I am on the lookout for a good Journalist. You are on the lookout for a suitable employer. Then why not you think of joining Vikatan?" வாசன் அவர்கள் இப்படிச் சொன்னதுமே சாவி விகடனில் சேர்ந்துவிட முடிவெடுத்து விட்டார். 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/111&oldid=824362" இலிருந்து மீள்விக்கப்பட்டது