பக்கம்:சாவி-85.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சாவிக்குத்தான் உண்டு என்றால் அது எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மை. தினமணி கதிரில் இவ்வளவையும் செய்வதற்கு முன்பாகவே, ஆனந்த விகடனில் எழுத்தாளர்களை உயர்த்துவதற்கு தம்மால் இயன்ற அளவுக்குப் பாடுபட்டார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்துப் பிரசுரிப்பதில் விகடன் என்றுமே முன்னணியில் நின்று வருகிறது. அப்படிப்பட்ட சிறந்த கதைகளில் மிகச் சிறந்த கதை ஒன்றை 'முத்திரைக் கதை'யாகத் தேர்ந்தெடுத்து அதற்கு ஒர் இலக்கிய அந்தஸ்து தரும் வழக்கத்துக்கு அடிக்கல் நாட்டியவர் சாவி. முத்திரைக் கதை என்று போடுவதன் மூலம் நல்ல சிறுகதையை அடையாளம் காட்டலாம் என்ற எண்ணம் ஒருபுறம். அப்படி ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்றக் கதைகளுக்குத் தருவ்தை விட அந்தக் கதைக்குச் சன்மானம் அதிகம் தரவேண்டிய நிலை ஏற்படும் என்ற ஆசை ஒரு புறம். இதன் விளைவாகத் தோன்றியதே முத்திரைக் கதை முயற்சி. சாவி தம்முடைய இந்த நோக்கத்தை வெளிப்படையாக யாரிடமும் சொல்லாமலே வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார். அப்போதெல்லாம் சாதாரணமாக ஒரு கதைக்கு அதிக பட்சம் ஐம்பது அல்லது அறுபது ரூபாய்தான் சன்மானம் தருவார்கள். முத்திரைக் கதைக்குக் குறைந்தபட்சம் நூறு ரூபாயாவது தர வேண்டும் என்று நிர்வாகப் பொறுப்பிலிருந்த பாலசுப்ரமணியன் அவர்களிடம் சாவி எடுத்துச் சொன்னபோது, அந்த யோசனையை மகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார். ஆனந்த விகடனில் அதுவரை சன்மானத்தை நிர்ணயிக்க ஒரு வேடிக்கையான முறையைக் கையாண்டு வந்தார்கள். கதையோ கட்டுரையோ எது பிரசுரமானாலும் அவற்றை ஸ்கேல்" வைத்து அளந்து அங்குலம் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் என்று கணக்கிட்டு அதன்படி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தேவன் பொறுப்பாசிரியராக இருந்தபோது தொடங்கப்பட்ட இந்த 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/115&oldid=824371" இலிருந்து மீள்விக்கப்பட்டது