பக்கம்:சாவி-85.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மெக்காலே காலத்து முறை கட்டோடு பிடிப்பதில்லை. இப்போது கூட அவரது வீட்டில் மேசை என்று எதுவும் கிடையாது. எழுத்தாளன் என்றால் மேசை நாற்காலி என்பது என்ன சூத்திரம்? என்று கேட்பார். அந்த நாட்களில் உதவி ஆசிரியர்கள் எல்லோரும் ஒரு பெரிய அறையில் ஒன்றுகூடி பாலு அவர்களோடு விவாதிப்பார்கள். இதற்காகவே காங்கிரஸ் மாநாட்டு மேடை போல மெத்தை விரித்து திண்டுகள் போடப்பட்டிருக்கும். அந்தச் சூழல் சாவிக்கு மிகவும் பிடிக்கும். ஆசிரியர் குழுவுக்கு நேரம் காலம் என்று எந்த வரைமுறையும் கிடையாது. காலை ஏழரை மணிக்கெல்லாம் ஆபீஸ் போய் விடுவார்கள். அவர்களுக்கெல்லாம் முன்பாகவே பாலு அங்கே ஆஜராகியிருப்பார். அந்த மாநாட்டு அறையில் உட்கார்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் 'டிஸ்கவுன் நடைபெறும். அடுத்த வாரத்துக்கான மேட்டர் பற்றிய ஆலோசனைதான். மேட்டர் எழுதிக் கொடுக்க வேண்டியவர்கள் இடையிடையே எழுந்து போய் தங்கள் மரத் தடுப்பு அறைகளில் உட்கார்ந்து, எழுத வேண்டியதை எழுதிக் கொடுத்து விட்டு, மீண்டும் வந்து விவாதத்தில் கலந்து கொள்வார்கள். அப்படி விவாதித்து தீர்மானிக்கப்படும் ஐடியாக்களை உதவி ஆசிரியர் மணியன் ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொள்வார். இரவிலும் நெடுநேரம் கண்விழித்து அந்த வாரத்து வேலைகளைச் செய்து முடிப்பார்கள். பத்திரிகை அலுவல கங்களில் இரவு - பகல் என்றெல்லாம் பார்க்க முடியாது. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் வேலை முடியும். ஒரு நாள் சாவி பாலு அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். "சில நாட்களில் வேலை முடிந்து படுப்பதற்கு இரவு ஒரு மணி, இரண்டு மணி ஆகிவிடுகிறது. அப்புறம் வீட்டுக்குப் 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/118&oldid=824375" இலிருந்து மீள்விக்கப்பட்டது