பக்கம்:சாவி-85.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் போக வாகன வசதி இருப்பதில்லை. ஆகையால் உதவி ஆசிரியர்கள் சற்று நேரம் கண்ணயர ஒரு சின்ன மெத்தையும், தலையணையும் இருந்தால் வசதியாக இருக்கும். அவரவர் அறையிலேயே படுத்துத் தூங்கிவிட்டுப் பிறகு மெத்தையைச் சுருட்டி கப்போர்டில் வைத்து மூடிவிடலாம்" என்றார் சாவி. இதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மெளனமாய்ப் போய் விட்டார் பாலு. தன் யோசனை அவருக்குப் பிடிக்கவில்லையோ என்று சாவிக்குச் சற்று அச்சம். ஆனால், இரண்டே நாட்களில் ஒவ்வொருவர் அறையிலும் ஒரு க்வில்ட்'டும், தலையணையும் புத்தம் புதிதாய்க் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. அப்போது விகடன் அலுவலக வளாகத்தின் முகப்புப் பகுதியில் பாட்மின்ட்டன் கோர்ட் இருந்தது. தினமும் காலையில் பாலு அவர்கள் அங்கு வந்து பாட்மின்ட்டன் விளையாடுவார். ஆடி முடித்ததும் அவரது பனியனும் கால்சட்டையும் ஏதோ மழையில் நின்று ஆடியது போல் நனைந்திருக்கும். சிற்சில சமயம் அதே கோலத்தில் அலுவலகத்துக்குள் வந்து உதவி ஆசிரியர்களின் அறைகளை எட்டிப் பார்த்து ஏதாவது வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் போவார். ஒரு நாள் காலை சாவி தமது அறையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். 'சாவி ஸார் இன்னுமா தூக்கம்? மணி ஏழுக்கு மேல் ஆகிறதே!" என்ற குரல் கேட்டு விழித்துப் பார்த்தால் எதிரில் பாலு! சாவி லேசாகச் சிரித்தார். "ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார் பாலு. 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/119&oldid=824377" இலிருந்து மீள்விக்கப்பட்டது