பக்கம்:சாவி-85.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சாவி - 85 எழுதியது ஏன்? - இப்போது அவருக்கு வயது எண்பத்தைந்து. இதில் அறுபது ஆண்டுகள் அவரது சுவாசம் பத்திரிகைப் பணியாகவே இருந்தது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நாள்தோறும் நேரில் அவரைப் பார்க்கவோ அல்லது தொலைபேசி மூலம் பேசவோ எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு என் வாழ்க்கையின் பெருமை. பத்திரிகை உலகில் அவரது கரம் பிடித்துக் கொண்டு நடை பயின்றவன் நான். உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவரோடு சேர்ந்து போனபோதெல்லாம் - அவரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம்-அவரதுஅனுபவங்களைக்கேட்டபோதெல்லாம் - நான் ஒரு பத்திரிகை ஆசிரியரோடு பழகுவது போன்றே உணர்ந்ததில்லை. ஒரு பல்கலைக் கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருப்பது போலவேதான் உணர்ந்திருக்கிறேன். உழைப்பு, நேர்மை, துணிவு - இந்த மூலதனம் ஒருவரை உயர்த்துமா? உயர்த்தும் என்பதுதான் சாவியின் வாழ்க்கை. சாவி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பகுதி பகுதியாக நான் கடந்த கால் நூற்றாண்டு காலம் கதை கேட்பது போலக் கேட்டிருக்கிறேன். கூடவே இருந்தும் கவனித்திருக்கிறேன். இவற்றை ஒரு நூலாக-ஒர் ஆவணமாகத் தொகுக்க வேண்டும் என்று ஆசை கொண்டேன். வேண்டாம் என்றார் சாவி, "என்னைவிட எத்தனையோ பேர் எப்படியெல்லாமோ உழைத்து முன்னுக்கு வந்திருக்கிறார்கள். அப்படி என்ன சாதித்து விட்டேன் என் வாழ்க்கையில் ஒன்றுமில்லை. வேண்டாம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/12&oldid=824379" இலிருந்து மீள்விக்கப்பட்டது