பக்கம்:சாவி-85.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அந்தக் கதையை நினைவில் வைத்துக் கொண்டு சாவியைச் சந்திக்கும் பழைய தலைமுறை நண்பர்கள் பாராட்டத் தவறுவ தில்லை. அதுமட்டுமல்ல. வாஷிங்டன் செல்லும் தமிழர்கள் அங்கே சாஸ்திரிகள் குளித்த பொடாமாக் நதியையும், பாலிகை விடப்பட்ட டைடல் பேஸினையும் அதைச் சுற்றியுள்ள செர்ரி மரங்களையும் பார்க்கும் போது சாவியின் வாஷிங்டனில் திருமணம்' ஞாபகத்துக்கு வந்து அதுபற்றி ஒருவருக்கொருவர் பேசி மகிழத் தவறுவதில்லை. தொடரின் இறுதிக் கட்டத்தில் ராஜகோபாலன் - ருக்மிணி கல்யாணம் அடுத்த அத்தியாயத்தில் நடக்கப் போகிறது என விகடனில் ஒரு திருமண அழைப்பிதழ் போலவே அச்சிட்டிருந்தார்கள். முகூர்த்தம் நடக்கப்போகும் தேதி அறிவிக்கப்பட்டிருந்ததால் திருமண தம்பதியரை வாழ்த்தி நூற்றுக்கணக்கான கடிதங்களும் தந்திகளும் விகடன் அலுவலகத்துக்கு வந்து குவிந்தன. சிலர் மொய்ப் பணம் கூட மணியார்டரில் அனுப்பி வைத்தார்கள் இப்படி, தன் நகைச்சுவையால் வாசகர்க ளைப் பைத்தியமாக அடித்தார் சாவி என்றே சொல்லவேண்டும். இத்தனைக்கும் யார் இதை எழுதுகிறார்கள் என்று கடைசி அத்தியாயம் வரை சொல்லாமல், சஸ்பென்ஸிலேயே வைத்திருந்தார். கடைசி அத்தியாயத்தில்தான் சாவி’ என்று மிகவும் சிறிய எழுத்துகளில் தன் பெயரைப் போட்டு அனுப்பி இருந்தார் சாவி. அதைப் பார்த்த விகடன் ஆசிரியர் பாலு அவர்கள் இருந்தாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாது' என்று சொல்லிப் பெயரைப் பெரிதாகப் போட வேண்டும் என்று கூறி சாவிக்குத் தெரியாமலே அந்தப் பெயரைப் பெரிதாக அச்சிட ஆணையிட்டிருந்தார். அப்புறம் பத்து ஆண்டுகள் கழித்துதான் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு சாவிக்கு வாய்த்தது. தன் மகள் ஜெயா, நீலகிரி நடராஜன், அவர் மனைவி ஆகியோருடன் சாவி 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/125&oldid=824392" இலிருந்து மீள்விக்கப்பட்டது