பக்கம்:சாவி-85.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் விடாக்கண்டன். இந்த ஆண்டு அவரது 85வது பிறந்த ஆண்டு. "நான் எழுதத்தான் போகிறேன்" என்றேன் பிடிவாதமாக என் ஆர்வம் வென்றது. ஒன்பது மாதங்களுக்கும் மேல் அவரைப் படாதபாடு படுத்தி விட்டேன். ஒய்வெடுக்கவே விடவில்லை. எனக்காக - இந்த நூலுக்காக - தமது வாழ்க்கையை அவர் திரும்பிப் பார்க்க வைத்தேன். வருட வாரியாக வாழ்க்கையைப் பதிவு செய்யும் நாட்குறிப்பு அல்ல இந்த நூல். இது ஒரு தேதியில்லா டயரி! ஆனால் அனுபவங்களின் அணிவகுப்பு. சாவி அவர்களோடு பழகியவர்கள் சொல்வதையும் எழுத்தில் வாங்கி புத்தகத்தில் சேர்த்துக் கொள்ள விரும்பினேன். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினேன். குவிந்தன பதில்கள். அவற்றில் பொருத்தமான வரிகளைப் பொருத்தமான இடத்தில் இந் நூலில் பொருத்தியிருக்கிறேன். - "நான் எழுதிய எவ்வளவோ மேட்டர்கள் தங்களது எடிட்டிங்கில் பொலிவு பெற்றிருக்கின்றன. இந்த நூலையும் எடிட்' செய்து தர வேண்டும்” என்று சாவியிடம் உரிமையுடன் கேட்டேன். சிரித்துக் கொண்டே சரி' என்றார். செய்து தந்தார். இந்த நூலின் பக்கங்களை நேர்த்தியாக அச்சுக் கோக்கும் பணியினை பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர் திரு.தங்க.காமராஜ்எத்தனை முறை திருத்தினாலும் முகம் சுளிக்காமல் அச்சுக் கோத்துத் தந்த நண்பர் திரு. செல்வின் கண் கவரும் வகையில் முகப்பு அட்டையை கணினியில் வடிவமைத்துத் தந்த ஓவியர் நண்பர் திரு. அரஸ் - நூலை அழகுற அச்சிட்டுத் தந்த ஆனந்த விகடன் அதிபர் மதிப்பிற்குரிய திரு. பாலசுப்ரமணியன் அனைவருக்கும் என் நன்றி என்றென்றும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/13&oldid=824402" இலிருந்து மீள்விக்கப்பட்டது