பக்கம்:சாவி-85.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அடுத்த நாளே சாவி புவனேசுவர் காங்கிரஸ் மாநாட்டுக்குப் புறப்பட்டு விட்டார். சாவியிடமிருந்து எடுத்துச் சென்ற கென்னடி பற்றிய புத்தகங்களைப் படித்துப் பார்த்த மணியன் கென்னடியின் கதை என்ற தலைப்பில் சில வாரங்கள் தொடர் கட்டுரையாக எழுதுவதற்கு ஆசிரியரிடம் அனுமதி பெற்று அடுத்த வாரமே எழுதவும் தொடங்கி விட்டார். விகடன் வாசகர்கள் மிகுந்த ஆவலுடன் அதைப் படித்தார்கள். வாசகர்களிடம் அந்தத் தொடர் எடுபடுமா என்று சந்தேகப்பட்டது சரியல்ல என்பது நிரூபணமாயிற்று. ' கென்னடியின் கதை'யை மணியன் எழுதி முடித்த பின்னர் அமெரிக்கத் தூதரகத்திலிருந்து உங்கள் நிறுவனத்தில் இருந்து ஒரு உதவி ஆசிரியரை அமெரிக்காவுக்கு எங்கள் விருந்தினராக அனுப்பி வையுங்கள் என்று விகடன் ஆசிரியருக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பிலிருந்த உண்மையான வாசகம் இதுதான் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. வாஷிங்டனில் திருமணம் எழுதியதால் எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பு அது என்று மட்டும் என்னால் கூற முடியும். கென்னடியின் கதை'யை தான் எழுதி இருப்பதை மணியன் தூதரகத்துக்குத் தெரியப்படுத்தி, அந்த அழைப்புக்குத் தன்னை உரியவராக்கிக் கொண்டாரோ என்பதே என் சந்தேகம். அதுதான் மணியனின் முதல் வெளிநாட்டுப் பயணம். பிறகு அவர் தொடர்ந்து எழுதிய பயணக் கதைகளுக்கு இந்தப் பயணமே வழி வகுத்தது. மணியன் அமெரிக்கா போனது பற்றி எனக்குப் பொறாமை எதுவும் இல்லை. ஆனால் எனக்குக் கிடைத்திருக்க வேண்டிய அந்த வாய்ப்பை மணியன் சுவீகரித்து விட்டாரோ என்ற ஆதங்கம் என் நெஞ்சில் ஒரு மூலையில் அரித்துக் கொண்டே இருந்தது. 132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/142&oldid=824430" இலிருந்து மீள்விக்கப்பட்டது