பக்கம்:சாவி-85.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பின்னர் பல வருடங்கள் கழித்து நான் 'குங்குமம்' ஆசிரியராகி விட்டதால் விகடன் நடத்திய சிறுகதைப் போட்டி ஒன்றுக்கு என்னையும் ஒரு நடுவராக பாலு அழைத்திருந்தார். அப்போது இதயம் பேசுகிறது ஆசிரியர் என்ற முறையில் மணியனும் நடுவராக அழைக்கப்பட்டிருந்தார். குமுதம் எஸ்.ஏ.பி, கலைமகள் கி.வா.ஜ., மக்கள் குரல் டி.ஆர்.ஆர். என்று தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் அத்தனை பேரும் நடுவர்களாக வந்திருந்தனர். இறுதி முடிவுகளைத் தீர்மானிக்க விகடன் அலுவலகத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார் பாலு. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் யார் என்பது முடிவானதும் எல்லா நடுவர்களும் புறப்பட்டு விட்டனர். 'சரி... அப்ப நானும் கிளம்பறேன்' என்று நான் எழுந்ததும் பாலு அவர்கள் சாவியைப் பார்த்து, 'போகலாம் இருங்க ஸார். ரொம்ப நாளாச்சு, உங்களோடு சிரித்துப் பேசி" என்று சாவியைத் தம் அறைக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். "ஏறத்தாழ ஒரு மணிநேரம் மனம் விட்டுப் பழைய சம்பவங்களையெல்லாம் அசை போட்டோம். அப்போது அந்த அமெரிக்கப் பயண விவகாரம் சம்பந்தமான என் மனக்குறையை திரு. பாலு அவர்களிடம் விவரித்தேன். பாலு அவர்கள் "அதெல்லாம் நடந்து போன விஷயம். அதை விடுங்க" என்று முத்தாய்ப்பு வைத்தது போல் முடித்து விட்டார். பாலுவிடம் என் மனக்குறையை மனம் திறந்து சொல்லி விட்ட பிறகு என் மனம் இலேசாகி விட்டது. அப்புறம் அந்தச் சம்பவம் பற்றி நான் நினைப்பதே இல்லை என்கிறார் சாவி. 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/143&oldid=824432" இலிருந்து மீள்விக்கப்பட்டது