பக்கம்:சாவி-85.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P R O D U CTI C) NS திரு. ராணிமைந்தன் அவர்களுக்கு வணக்கம். இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சிறந்த தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களில் என் மதிப்பிற்குரிய திரு. சாவி அவர்கள் மூத்தவர் மட்டுமின்றி, தமது நகைச்சுவையால் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைப் பெற்றிருப்பவர். அவரது வாழ்க்கை ஒரு அற்புதச் சுரங்கம், ஆழ்கடல். அவர் பழகிய பிரமுகர்களின் பட்டியல் நீண்டது. 85-வயது ஆகும் திரு. சாவி அவர்களது வாழ்க்கை அனுபவங்களை சாவி - 85 என்ற தலைப்பில் ஒரு நூலாக இனிய நண்பர் திரு. ராணிமைந்தன் அவர்கள் எழுதியிருப்பது அறிந்து மிகவும் மகிழ்கிறேன். இந்தப் பயனுள்ள முயற்சியை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். திரு.சாவி அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் இளைய தலைமுறைப் பத்திரிகையாளர்களுக்கு, அவர்கள் தங்களைச் செம்மைப்படுத்திக் கொள்ள பெரிதும் உதவும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. - 85-வயதாகும் திரு. சாவி அவர்களுக்கு என் வணக்கம். சாவி-85 நூலுக்கு என் வாழ்த்துகள். தங்களன்புள்ள, மெ. சரவணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/15&oldid=824447" இலிருந்து மீள்விக்கப்பட்டது