பக்கம்:சாவி-85.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 'நீ என்ன சொன்னாலும் வாசன் கேப்பாராமே" என்று திடீரென சுவாமிகள் பேச்சை ஆரம்பித்தார். "பெரியவா நினைக்கிற மாதிரி அப்படியெல்லாம் இல்லை. பெரியவா ஏதாவது சொல்லச் சொன்னா அதை அப்படியே போய் வாசன் அவர்களிடம் சொல்லத் தயாராக இருக்கிறேன். என்றார் சாவி. "உங்க விகடன்ல கிறிஸ்துவ மதத்துல சேரச் சொல்லி வாரா வாரம் ஒரு விளம்பரம் வறதே, நீ அதை பாத்திருக்கியோ?” "பாத்திருக்கேன்." 'அந்த விளம்பரத்தை நிறுத்திடணும்னு ஆனந்த விகடன்லேர்ந்து வரவா கிட்டேயெல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். அவா எல்லாரும் உன் பேரைச் சொல்லி சாவி சொன்னா வாசன் கேட்பார்னு சொல்றா. அதனால நீ அதை வாசன் கிட்டச் சொல்லி உடனே நிறுத்திடு, ! என்றார். "சரி... சொல்கிறேன்" என்று சாவி உடனே பதில் சொல்லி விடவில்லை. பெரியவரிடம் கொஞ்சம் வாதாடிப் பார்த்தார். . "இந்து மதம் கடல் போன்றது. பெரும் சிறப்புகளை உள்ளடக்கியது, அது அவ்வளவு எளிதில் அழிந்து விடக் கூடியதல்ல. ஒருவேளை அப்படியே இந்த விளம்பரத்தைப் பார்த்துக் கொஞ்சம் பேர் கிறிஸ்துவ மதத்துக்குப் ப்ே விடுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அதனால் ஹிந்து *ಹ್ಲಿ ஏற்பட்டு விடப்போவதில்லை. அது அத்தனை பல் னே. மதமும் அல்ல' என்று ஒரு துணிச்சலோடு சொல்லி விட்டார் சர்வி சாவி இப்படிப் பேசுவதைக் கேட்டு பெரியவர் கோபம் அடையவில்லை. 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/150&oldid=824449" இலிருந்து மீள்விக்கப்பட்டது