பக்கம்:சாவி-85.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஆசிரியர் குழுவினரிடம் வேடிக்கையாகச் சொல்வதுண்டாம், ஜெமினி பேயிங் பிஸினஸ், விகடன் பேயாத பிஸினஸ் என்று 1950 - களில் விகடனின் விற்பனை எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விடவே, வாசன் பரபரப்பாகி ஜெமினியில் இருந்து விகடன் அலுவலகத்துக்கு வந்து உட்கார்ந்து கொண்டு 'விகடன் விற்பனை ஏன் குறைந்து விட்டது. என்ன காரணம்?" என்று சர்க்குலேஷன் பிரிவை உலுக்கி எடுத்து விட்டாராம். அவர்கள் எதையெதையோ காரணம் காட்டி நம்ம சர்க்குலேஷன் ஒரு சாச்சுரேஷன் பாயிண்ட்டுக்கு வந்தாயிற்று. இதை அப்படியே நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்று சொன்ன காரணத்தை வாசன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோபமாக "வாட் நான்சென்ஸ் யு ஆர் டாக்கிங் குமுதம், கல்கியெல்லாம் எப்படி அதிகமாக விற்பனை ஆகின்றன? முயற்சி செய்தால் நிச்சயம் எட்டு லட்சம் வரை நம்மால் எட்ட முடியும்' என்று கடிந்து கொண்டாராம். அது மட்டுமல்ல. அந்த நேரத்தில் வாசன் அவர்கள் சிலிர்த்துக் கொண்டு ஸர்க்குலேஷனை உயர்த்தியே தீருவது என்று ஒரு வேகத்துடன் இரவு பகலாய் செயல்படத் தொடங்கிய சாகசத்தை ஆச்சரியத் தோடு விவரிக்கிறார் சாவி. 'இவர்கள் சந்தித்தால் என்ற தலைப்பில் கட்டுரைகள்; முனுசாமி - மாணிக்கம் என்ற கற்பனைப் பாத்திரங்கள் மூலம் சினிமா விமரிசனம், தில்லானா மோகனாம்பாள் தொடர்கதை; இப்படிப் பலப் பல புதுமைகளை அறிமுகப்படுத்தி விகடன் புகழை வானளாவ உயர்த்தி சாதனை படைத்தார். இதையெல்லாம் வாசன் அவர்கள் அவ்வளவு எளிதாகச் செய்து விடவில்லை. தினசரி 'எடிட்டோரியல் மீட்டிங் போட்டு ஆசிரியர் குழுவினருடன் மணிக்கணக்கில் விவாதித்து ஆலோசனை நடத்திய பிறகே வெற்றி கண்டார் என்று சொல்லும் சாவி அந்தக் கூட்டங்களில் தம்முடைய பங்களிப்பும் சிறிதளவு உண்டு என்று அடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறார். 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/155&oldid=824459" இலிருந்து மீள்விக்கப்பட்டது