பக்கம்:சாவி-85.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 “எடிட்டோரியல் மீட்டிங்கில் அமர்ந்து விட்டால் வாசன் அவர்களுக்கு உலகமே மறந்து போகும். நேரம், காலம் போவதே தெரியாமல் தம் தொழிலில் லயித்துப் போவார். இடை இடையே ஜெகதீசன் கொடுக்கும் மணம் வீசும் காப்பி மட்டும் இருந்து விட்டால் போதும். கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் கலைமணி என்ற புனை பெயரில் தமது சிரஞ்சீவி இலக்கியமான தில்லானா மோகனாம்பாளை படைத்ததும் இந்தக் காலக் கட்டத்தில்தான். இந்தக் கதை எப்படி உருவாயிற்று, எப்படி கண், மூக்கு, காது பெற்றது, எப்படியெல்லாம் கதைப் போக்கு தலைகீழாக மாறியது, கதையில் வரும் கேரக்டர்கள் எப்படி ஜீவனுள்ள பாத்திரங்களானார்கள் என்பதைச் சொல்லப் போனாலே அது ஒரு பெரிய கதையாகி விடும். கொத்தமங்கலம் சுப்புதான் கதையை எழுதியவர் என்றாலும், அந்தப் புகழ் மிக்க கதைக்கு உயிரும் உருவமும் கொடுத்த முழுப் பெருமையும் வாசன் அவர்களையேச் சேரும்.” என்கிறார் சாவி. இரண்டு சம்பவங்கள் சாவியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டிருக்கின்றன. "வழக்கம் போல ஒரு நாள் எடிட்டோரியல் மீட்டிங் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அன்று ஜெமினியின் படம் ஒன்றின் வெளிப்புறப் படப்பிடிப்பு பரங்கிமலையில் நடந்து கொண்டிருந்தது. அன்று படப்பிடிப்பில் குதிரை பூட்டிய சாரட் வண்டியை வைத்து ஏதோ ஒரு காட்சி. நாங்களெல்லாம் விகடன் அலுவலகத்தில் டிஸ்கஷனில் தீவிரமாக மூழ்கியிருந்தோம். திடீரென்று வாசன் அவர்களின் செக்ரடரி நம்பியாரிடமிருந்து வாசனுக்கு ஒரு போன் செய்தி: படப்பிடிப்பில் ஒரு விபத்து. சாரட் வண்டியில் பூட்டப் பட்டிருந்த குதிரை - அது மைசூர் மகாராஜாவின் குதிரை, படப் 146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/156&oldid=824461" இலிருந்து மீள்விக்கப்பட்டது