பக்கம்:சாவி-85.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் வேண்டும். எனவே,அக்கட்டுரைகள் வெற்றி பெற்றதில் வியப்பில்லை. 'முதுமலைக் காட்டில் யானையின் மீது அமர்ந்து விடியற்காலை அரை இருட்டு வேளையில் அப்படியும் இப்படியும் அசைந்தாடிக் கொண்டே வனப்பிரதேசங்களைச் சுற்றி வந்து மான் கூட்டங்களையும், பைலன்களையும் தொடு தூரத்தில் பார்த்தது என்ன மாதிரி அனுபவம் தெரியுமா?’ என்று இப்போதும் குழந்தை போல் குதூகலிக்கிறார். காட்டுக்குப் போய் வந்து அது பற்றி விகடனில் கட்டுரை எழுதி முடித்ததும், சாவிக்கு திடீரென ஒரு ஐடியா உதயமாயிற்று. 'மீனவர் படகு ஒன்றில் கடலுக்குள் போய் அந்த அனுபவத்தையும் எழுதினால் என்ன?’ என்பதே அந்த ஐடியா. சாவி இப்படி ஒரு ஐடியாவை பாலு அவர்களிடம் சொன்னதும், பாலு உற்சாகத்தோடு ஆமோதித்து "அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலை நாம் எல்லோரும் படகுப் பயணம் செய்து விட்டு வரலாம்' என்று கூறியதுடன் அந்தப் பயணத்துக்கு வேண்டிய அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டார். தயிர் சாதம், புளியோதரை, சாம்பார் சாதம், அப்பளம் என்று பெரிய பாத்திரங்களில் சாப்பாட்டு அயிட்டங்கள் படகில் ஏற்றப்பட்டன. போதாக்குறைக்கு குளிர்பான பாட்டில்களும், பிஸ்கட் டின்களும் வேறு. சுமார் இருபது பேர் இருக்கலாம். காலை பத்து மணி அளவில், மெரீனா பீச் காந்தி சிலைக்கு அருகில் எல்லோரும் கூடி படகுப் பின்னணியில் ஒரு குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். மீனவர்கள் நாலு பேரை துணைக்குச் சேர்த்துக் கொண்டு ஜலசா கோஷத்துடன் கடலில் ஜமாவாகப் புறப்பட்டனர். - படகு இரண்டு மைல் தூரம் கூடப் போயிருக்காது. அனைவரையும் 'n Rக்னெஸ் என்ற கடல் பயண ஒவ்வாமை' தொற்றிக் கொண்டது. வயிற்றைப் புரட்டி வாயில் எடுக்க 151

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/161&oldid=824473" இலிருந்து மீள்விக்கப்பட்டது