பக்கம்:சாவி-85.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஆரம்பித்தார்கள். சாவி அவர்கள் தண்ணீரைக் கண்டால் மீனாக மாறி விடுவார். தண்ணில் நீச்சல், வாழ்க்கையில் எதிர் நீச்சல் இரண்டிலும் வல்லவர் அவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென கடலுக்குள் குதித்து விட்டார். நீச்சல் தெரியும் என்றாலும் தண்ணிரில் போனதும்தான் அவருக்குச் சொரேல் என்றது. இது சுறா மீன்கள் நடமாடும் பகுதி என்று படகுக்காரர் எச்சரித்திருந்தது நினைவுக்கு வந்தது. சட்டென்று படகைப் பிடித்து ஏறவும் முடியவில்லை. தண்ணீர் மட்டத்துக்கும் படகின் விளிம்புக்கும் இடையே ஒரு ஆள் உயரம் இருந்தது. எதைப் பிடித்துக் கொண்டு எப்படித் தொத்துவது? கொஞ்சம் பயந்து போனார் சாவி. சிறிது நேரப் போராட்டத்துக்குப் பின்னரே படகுக்காரர்கள் அவரைப் படகுக்குள் இழுத்துக் கொள்ள முடிந்தது. "எந்த தைரியத்தில் இப்படி திடீரென கடலில் குதித்தீர்கள்?" என்று கேட்டால் 'அசட்டுத் துணிச்சல்தான். இது போன்ற பைத்தியக்காரத்தனமாக நான் எதையாவது செய்து விட்டு விழிப்பதும் கடைசியில் ஒரு விதமாகச் சமாளித்து மீள்வதும் எனக்கு சகஜம்தான்' என்கிறார். படகில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலோர் கடல் ஸிக்னெஸ் காரணமாகக் களைத்துப் போய் விட்டதால் ஐலசா கூச்சலும், எக்களிப்பான உற்சாகக் குரல்களும் அடங்கிப் போயிற்று. எனவே கடல் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டு படகைத் திருப்பிக் கரை நோக்கிப் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. கொண்டு போன சாப்பாடு வகையறாக்கள் கூல்ட்ரிங்ஸ் எல்லாம் அப்படியே திரும்பி வந்து சேர்ந்தன. அந்த அயிட்டங்களைப் பார்ப்பதற்கே வெறுப்பாக இருந்ததுடன், பயணத்தை அனுபவிக்க முடியவில்லையே என்ற குறையும் அனைவருக்கும் இருந்தது. "ஒரு விதமாகப் படகு கரை சேர்ந்ததும் அடுத்து என்ன செய்வது என்ற கேள்வி அனைவர் உள்ளத்திலும் எழுந்தது. 152

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/162&oldid=824475" இலிருந்து மீள்விக்கப்பட்டது