பக்கம்:சாவி-85.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 என்று காமராஜரிடம் முறையிட்டார்கள். அவர்கள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த காமராஜர் அவர்களிடம் ஆணித்தரமாக ஒரு கேள்வி கேட்டார். "பஸ் விடறதுல லாபமில்லேன்னு சொல்றீங்க. ஆனால் தினம் தினம் புதுப் புது ரூட் கேட்டு அப்ளிகேஷன் வந்து குவியுதே. அது எப்படீன்னேன்?' வந்தவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. பேசாமல் திரும்பிப் போய் விட்டார்கள். காமராஜருடன் படகில் போய்க் கொண்டிருந்தபோது ஏரியைச் சுற்றிலும் அமைந்துள்ள அந்த அழகிய இடத்தை நவீன வசதிகளோடு மாற்றி சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கேற்ப வீடுகள் வீடுகள் கட்டிக் கொடுத்தால் என்ன என்று பேச்சு வாக்கில் ஒரு யோசனை சொன்னார் சாவி. அதற்கு காமராஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா? "பணக்காரங்க மட்டும் இங்கே வந்தாப் போதுமா? அவங்களுக்கு என்ன? பெரிய ஹோட்டல்ல தங்கிட்டுப் போவாங்க. ஏழை எளிய மக்கள் இங்க வரணும்னேன். அவங்களுக்குத்தான் வசதி பண்ணித் தரணும். ஏரிக்கரையைச் சுட்டிக் காட்டி, அதோ பாருங்க. அந்த இடங்கள்ல ஏழைங்க வந்து தங்கற மாதிரி காட்டேஜ் கட்டணும். அங்கேயே சமையல் செய்து சாப்பிட பாத்திரங்கள் கிடைக்கற மாதிரி வசதி செய்து தரணும். அஞ்சு ரூபாய்க்கு மேல வாடகை வாங்கக் கூடாது. அப்பதான் ஏழைங்களாலே இங்கு வந்து தங்க முடியும்’ என்றார். காமராஜரின் வித்தியாசமான அணுகுமுறையை, மதி நுட்பத்தை, எப்போதும் ஏழை மக்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் மனப்போக்கை நினைத்துப் பார்த்து சாவி ஆகா, எப்பேர்ப்பட்ட தலைவர் என்று ஆச்சரியப்படுகிறார். "மரங்களையெல்லாம் இப்படிக் கண்டபடி வெட்டிப் 160

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/170&oldid=824493" இலிருந்து மீள்விக்கப்பட்டது