பக்கம்:சாவி-85.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. பெரியாருடன் ஒரு நாள் பிராமணியத்துக்கு எதிராக மிகத் தீவிரமாக போர்க்கொடி தூக்கிய பெரியார் (கடவுளை அறவே மறுத்த தந்தை பெரியார்) சாவி அவர்களைப் பெரிதும் கவர்ந்த தலைவர்களில் ஒருவர் என்பது வியப்புக்குரிய உண்மை. - 'பெரியார் அவர்களின் கொள்கைகள் எதனோடும் ஒத்துப் போகாத உங்களுக்கு எப்படி அவர் மீது இவ்வளவு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டது? என்று கேட்டேன். பெரியார் மீது தாம் ஈர்க்கப்பட்ட விதத்தை விவரிக்கிறார் சாவி. நான் அப்போது நாச்சியப்ப செட்டித் தெருவில் வசித்து வந்தேன். பெரியார் அப்போது ஒருநாள் எங்கள் தெரு முனையில் ஒரு கூட்டத்தில் பேசினார். அவர் பேசி நான் கேட்ட முதல் கூட்டம் அதுதான். தம்முடைய கொள்கைகளை அவர் எடுத்து வைத்து மட்டைக்கு இரண்டு கீற்றாக விளக்கிய விதம்தான் என்னைப் பெரிதும் கவர்ந்தது. எளிமையான சக்தி வாய்ந்த சொற்கள், அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஏழை எளிய மக்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்து விடக்கூடிய விதத்தில் வார்த்தைகளைப் பெரியார் கையாண்ட முறை எல்லாமே என்னைக் கவர்ந்தது. பிராமணியத்தின் மீது எனக்கே வெறுப்பு தோன்றும் அளவுக்கு சக்தி வாய்ந்த சொற்பொழிவாக அவருடைய அன்றைய பேச்சு இருந்தது. 162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/180&oldid=824514" இலிருந்து மீள்விக்கப்பட்டது